(விரி.) தான் - அசைநிலை. குரவு பாவையினை ஈன்ற வொன்றையே செய்து, வளர்த்தலை யறியாது போயினமையின் தலைவியின் மொழியினை அறிய வன்மை கொள்ளாததாயிற்று, வளர்க்குங்கா லன்றோ மக்களின் மொழி கேட்கும் பேறு வாய்க்கும்? சுரம் - பாலை நிலவழி. சென்ற - தலைவனுடன் போய தலைவியைத் தேடிச் சென்ற. குரவு - குராமரம்; குழந்தை போன்றுள்ள காய் காய்ப்பது. (66) வல்வருங் காணாய் வயங்கி முருக்கெல்லாஞ் செல்வர் சிறார்க்குப் பொற் கொல்லர்போ - னல்ல பவளக் கொழுந்தின்மேற் பொற்றாலி பாஅய்த் திகழக்கான் றிட்டன தேர்ந்து. [தோழி பருவங் காட்டி வற்புறுத்தியது] (பத.) முருக்கு எல்லாம் - முருக்க மரங்களெல்லாம். வயங்கி - விளக்கத்தோடு கூடியனவாய், செல்வர் சிறார்க்கு - செல்வமுடையாரின் மக்கட்கு, பொன் கொல்லர் போல் - தட்டார் (ஐம்படைத்தாலி செய்தாற்) போன்று, நல்ல - உயர்ந்த, பொன்தாலியின் மேல் - பொன்னாற் செய்யப்பட்ட கழுத்தணியின்மீதே, பவள கொழுந்து - பவளமாகிய துண்டத்தினை, பாய் - பதித்து வைத்தாற் போல, திகழ-காணும்படியாக, கான்று இட்டன - வெளிவிட்டன (மலர்ந்தன.) (ஆதலான்,) தேர்ந்து - ஆராய்ந்து, காணாய் - (இது வேனிற்காலம் என்பதை) அறிவாயாக, (ஆகவே,) வல்வரும் - (நம் காதலன்) விரைவில் வருவன். (என்று தோழி தலைவியிடங் கூறினாள்.) (ப-ரை.) நங் காதலர் விரைந்து வருவர்: விளங்கி முருக்குக்களெல்லாம், செல்வமுடையார் புதல்வர்க்குப் பொற்கொல்லர் ஐம்படைத்தாலி செய்தாற்போல, மிக்க பவளக் கொழுந்தின் அடியிலே பொற்றாலியைப் பதித்து வைத்தாற்போல் விளங்கக் கான்றன; ஆதலாற் றேர்ந்து பாராய். (விரி.) பாஅய் - செய்யுளிசைநிறை யளபெடை. "பொற்றாலியின்மேல் பவளக் கொழுந்து," எனமாற்றுக. முருக்கமலரின், புல்லிதழாகிய அடிப்பாகம் பசுமை கலந்த
|