67

தகையினா லெஞ் சீறூர்த் தங்கினிராய் நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு.

[இடைச் சுரத்துக் கண்டார் செலவு விலக்கியது.]

(பத.) அத்தம்- (நீங்கள் செல்லவேண்டிய) இப்பாலை நில வழிகளும். நெடிய - நீண்டனவாயுள்ளன, அத்தம் - அத்த மலையின் கண்ணே, அழல் - நெருப்பினைப் போன்ற கதிரோன் - கதிர்களை யுடையவனாகிய பகலோன், செம்பாகம் - பாதி யளவு வரை, மறைந்தான் - மறைந்து விட்டான், (ஆதலால்,) இ அணியிழை ஓடு - இவ்வழகிய மங்கையுடன் (நீரும்,) ஒத்த - (எம்மோடு) ஒருபடித்தாய, தகையினால் - தகுதியோடு, எம் சீறூர் - எமது சிறிய ஊரின் கண்ணே, தங்கினிர் ஆய் - (இன்று) தங்கி, நாளை - மறுநாள், வகையினிர் ஆய் - எங்களின் நீங்கி, சேறல் - போதல், வனப்பு - அழகாம். (என்று சுரத்திடைக் கண்ட மக்கள் தலைவனை நோக்கிச் சொன்னார்கள்.)

(ப-ரை.) வழிகளும் நெடிய; அத்த மலையின் கண்ணே அழற் கதிரோனுஞ் செம்பாகம் மறைந்தான்; இவ்வணியிழையோடு நீரும் எம்மோ டொத்த தகையினால் எஞ்சீறூரிலே இன்று தங்கினீராய் நாளை எங்களினீங்கிப் போதலழகு.

(விரி.) அத்தம் - ஒரு மலை. இது, களவின் இறுதியில் தலைவியை உடன்கொண்டு சென்ற தலைவனை நோக்கிப் பாலைநில வழியிடையே எதிர்ப்பட்ட மக்கள் கூறியதாகும். சேறல்=செல்+தல். இடைச் சுரம் - சுரத்திடை, சுரம் - பாலை நில வழி. செம்பாகம் - சரிபாதி.

(70)

நின்னோக்கங் கொண்டமான் றண்குரவ நீழல்காண்
பொன்னோக்கங் கொண்ட பூங் கோங்கங்காண் - பொன்னோக்கங்
கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்!
வண்ட லயர்மணன்மேல் வந்து.

[புணர்ந்து உடன்போய தலைமகன் தலைமகளை
ஆற்றுவித்துக் கொண்டு போவான் சொல்லியது.]