பாலை; ஒழுக்கத்தான் நெய்தல்," என்றார். எங் காதலர் மிக அன்புடையராயினும் பிரிந்த இப்பொழுது வன்புடையா ராயினர், ஆதலின், நீ நின் காதலனுடன் ஊடல் பயனின்று. இவ்வூடலான் 'பிரிவு ஏற்படின், நின் காதலனும் வன்புடையானாவன் என்பது கருத்தாம். ஆல் - அசைநிலை, ஏ - பிரிநிலை. (75) எரிந்து சுடுமிரவி யீடில் கதிரான் விரிந்து விடுகூந்தல் வெஃகாப் - புரிந்து விடுகயிற்றின் மாசுணம் வீயுநீ ளத்த மடுதிறலான் பின்சென்ற வாறு. [மகட்போக்கிய தாய் சொல்லியது] (பத.) விரிந்து - விரித்து, விடு கூந்தல் - விட்ட கூந்தலையுடைய என்மகள், அடுதிறலான் - போர்வன்மை மிக்க தலைவனின், பின் - பின்னர், வெஃகா - விருப்பத்தோடு கூடி, சென்ற ஆறு - போய வழியானது, எரிந்து - அழன்று, சுடும் - சுடுகின்ற, இரவி-பகலோனது, ஈடு இல் - ஒப்பில்லாத, கதிரான் - வெப்பத்தினாலே, மாசுணம் - மலைப்பாம்புகள், புரிந்து - முறுக்கி, விடு - விட்ட, கயிற்றின் - கயிற்றினைப் போன்று, வீயும் - புரண்டு மாண்டு கிடக்கும், நீள் - நீண்ட, அத்தம் - கடத்தற்கரிய பாலை நில வழியாம். (அதன்கண் என் மகள் எங்ஙனம் அச்சமின்றிச் செல்வளோ? என்று தாய் வருந்தித் தனக்குட் டானே கூறித் துயரம் மிகக் கொண்டனள்.) (ப-ரை.) அழன்று சுடாநின்ற பகலோனது ஒப்பில்லாக் கதிரான் மாசுணங்கள் முறுக்கிவிட்ட கயிறுபோலப் புரண்டழியும் அத்தம், விரிந்துவிட்ட கூந்தலையுடையாள் அடுதிறலான் பின் விரும்பிச் சென்ற வழி. (விரி.) விரிந்து - விரித்து: எதுகை நோக்கி மெலிந்தது. விடுகூந்தல் - வினைத்தொகை யன்மொழி. தாய் - பெற்ற தாய். வெஃகா - செய்யா என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம். போக்கிய - உடன்போக்கால் தவறவிட்ட. (76) நெஞ்ச நினைப்பினு நெற்பொரியு நீளத்த மஞ்ச லெனவாற்றி னஞ்சிற்றா - லஞ்சிப்
|