74

புடைநெடுங் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட
படைநெடுங்கண் கொண்ட பனி.

[பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித்
தலைமகன் செலவழங்கியது.]

(பத.) நெஞ்சு - (எனது) மனமானது, அஞ்சல் என - அச்சமுறல் என்று (இவளை,) ஆற்றின் - ஆற்றுவிப்பதற்குரிய சில சொற்களை, நினைப்பினும் - (சொல்ல) நினைத்தாலும், நெல் - (அங்கு அகப்படும்) நெற்களும், பொரியும் - (பகலவன் கதிர்களாற்) பொரிந்து போம்படியான, நீள் - நீண்டு செல்லும்படியான, அத்தம் - பாலைநில வழியினை (எடுத்து நன்மையாகச் சொல்லவேண்டி நினைப்பதற்கு முன்னே,) அஞ்சிற்று - பிரிவினை எண்ணி அச்சமுறலாயது, (என் முகக் குறிப்பாற் பிரிவினை யுணர்ந்த இவளின்,) புடை - பக்கத்தே அடுத்துள்ள, நெடும் - நீண்ட, காது - செவிகளை, உற - பொருந்தும்படியாக, போழ்ந்து - ஊடுருவிச் சென்று, அகன்று - பரந்து, நீண்ட - நீட்சியுற்ற, படை வேற்படையினை யொத்த, நெடும் - பெரிய, கண் - கண்கள், அஞ்சி - அச்சமுற்று, பனி துன்பத்தாற் றோன்றும் நீரினை, கொண்ட - நிறையப் பெற்றன. (ஆகலான், யான் இவளைப் பிரிந்து செல்லல் இயலாத தொன்றாம், என்றான் தலைவன்.)

(ப-ரை.) என்னெஞ்சமே! இவளை ஆற்றுவிக்குஞ் சில சொற்களைச் சொல்ல நினைக்கின்றாயாயின், இவணோ தான் நெற்பொரியும் நீளத்தத்தைச் சொல்ல நினைப்பதற்கு முன்னே பிரிவினை யஞ்சிற்றால்; புடைநெடுங் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட படை நெடுங்கண்களும் பிரிவினை யஞ்சிப் பனி கொண்டன: ஆதலான் நமக் கிவளைப் பிரிய முடியாது.

(விரி.) வலித்தல் - இன்றியமையா தென நினைத்தல், அழுங்கல் - தவிர்ந்து வருந்தல், நெஞ்சு, நினைப்பினும். அஞ்சிற்று; நெடுங்கண் அஞ்சி, பனிகொண்டன, என முடிக்க. பழைய உரையில், 'நெஞ்சு,' என்பதனை அண்மை விளியாக் கொண்டு, 'அஞ்சிற்றால்,' என முடித்தமை பொருந்தாமையான், படர்க்கைப் பெயராக் கொண்டாம்,