ஆல் - அசைநிலை, பொருள்வயிற் பிரிய நினைத்த தலைமகன் தனக்குட் டானே சொல்லிக்கொண்ட தாகு மிச் செய்யுள். (77) வந்தாற்றான் செல்லாமோ வாரிடையாய்! வார்கதிரால் வெந்தாற்போற் றோன்றுநீள் வேயத்தந் - தந்தார் தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி மகரக் குழைமறித்த நோக்கு. [வினைமுற்றிய தலைமகன் தலைமகளை நினைந்தவிடத்துத் தலைமகள் வடிவு தன்முன் நின்றாற்போல வந்து தோன்ற அவ்வடிவை நோக்கிச் சொல்லி ஆற்றுவிக்கின்றது.] (பத.) ஆர் இடையாய் - காணுதற்கரிய இடையினையுடைய காரிகாய்! தந்து - கொடுத்து (அணிந்து,) ஆர் - நிறைந்த, தகரம் - மயிர்ச்சாந்தினையுடைய, குழல் - கூந்தலானது, புரள - (அவிழ்ந்து) தொங்க, தாழ் - பின் புறமாகத் தொங்குகின்ற, துகில் - முன்தானையை, கை - வலக்கையாலே, ஏந்தி - பற்றிக்கொண்டு, மகர குழை - சுறாமீன் போன்று செய்யப்பட்ட காதணியோடு, மறித்த - (சென்று) மடங்கி நின்ற, நோக்கு - பார்வையுடன், வந்தால் - (என் எதிரே நீ) வருதலைச் செய்தால், வார் - நீண்ட, கதிரால் - பகலவன் சுடர்களால், வெந்தால் போல் - வேக்காடுற்றன போல், தோன்றும் - காணப்படும், நீள் - நீண்ட, வேய் - மூங்கில்கள் நிறைந்த, அத்தம் - இப்பாலை நிலவழியே, செல்லாமோ - (திரும்பி நின்பாற் செல்லும்) செலவினை யாம் ஒழிப்பேமோ? (ஒழியேம். நின்னுடன் வருவேம். ஆகலின், நீ இரங்கல், என்று தலைமகன் தன்முன் தோன்றிய உருவெளித் தோற்றமாகிய தலைமகள் மாட்டுச் செப்பினான்.) (ப-ரை.) கொண்டணிந்து நிறையப்பட்ட தகரத்தையுடைய குழல்கள் அசையத் தாழ்ந்து துகிலைக் கையானே ஏந்தி மகரக்குழை மறித்த நோக்குடனே நீ வந்தால் யாம் போகோமோ? அரிய இடையினை யுடையாய்! நீ இரங்க வேண்டா.
(விரி.) தான் - அசைநிலை. வினைமுற்றல் - சென்ற காரியம் நிறைவேறல். "வார்கதிரால் வெந்தாற் போற்றோன்று
|