76

நீள் வேயத்தம்," என்ற தொடர்க்குப் பழையவுரையிற் பொருள் காணப்படவில்லை.ஆற்றுவித்தல் - நின்னொடு செல்வேனெனத் தலைமகளை ஆற்றுவிப்பது. இங்குக் கூறும் உரு வெளிப்பாடு படிப்பார்க்குப் படம் பிடித்துக் காட்டியாங்குக் கூறப்படுதல் காண்க. இச்செய்யுளினை நச்சினாக்கினியர் பாலையிற் பாலைத்திணை என்றார். (தொல். அகம். 40) பிரிவின்கண் உடன் போக்கு கூறப்படுதலின். தாழ் துகில் - வினைத்தொகை.

(78)

ஒருவகை யிருமருப்பின் மும்மதமால் யானை
பருகுநீர் பைஞ்சுனையிற் காணா - தருகல்
வழிவிலங்கி வீழும் வரையத்தஞ் சென்றா
ரழிவில ராக வவர்.

[ஆற்றா ளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல்
என்பது படச் சொல்லியது]

(பத.) ஒருகை - துதிக்கையொன்றனையும், இரு மருப்பு இன் - இரண்டு கொம்புகளையும், மும் மதம் - மூன்று மதங்களையுங் கொண்ட, மால் - பெரிய, யானை - யானைகள், பைஞ்சுனையில் - பசிய சுனையினிடத்திலே, பருகுநீர் - குடிப்பதற்குத் தண்ணீர், காணாது - கிடைக்கப்பெறாது, அருகல் - அச்சுனையினை யடுத்து, வழி விலங்கி - மேலும் வழி நடக்கமாட்டாது, வீழும் - தளர்ந்து விழுந்து கிடக்கும்படியான, வரை - மலைகளையுடைய, அத்தம் பாலைநிலவழியே, சென்றார் அவர் - சென்றவராகிய நம் தலைவர், அழிவிலர் ஆக - எவ்வகை இடையூறு மின்றிச் செவ்வனே திரும்புவாராக. (என்று தோழிக்குத் தலைமகள் கூறினாள்.)

(ப-ரை.) ஒரு கையினையும் இருகோட்டினையும் மூன்று மதத்தினையும் உடைய மால் யானைகள் பருகு நீரைப் பைஞ்சுனையின்கட் காணாவாய் மருங்கே வழிவிலங்கித் தளர்ந்து வீழும் வரைகளையுடைய அத்தத்தைச் சென்ற அவர் அவ்வழி இடையூறின்றி அழிவிலராக.

(விரி.) காதன் மிகப் பெற்ற இவளைக் கைவிட்டுச் சென்ற தலைவன் கன்னெஞ்சன் எனக் கவன்ற தோழிக்குத்