90

(ப-ரை.) புள்ளிப் பருந்துகள் கழுகுடனே வழி போவாரைப் பார்த்து அங்கிருந்து உறங்கப்பட்டுக் கள்ளியுஞ் சாருங் காரோமையும் நாரில் பூ நீண்முருங்கையும் வேயும் பொருந்தி யமர்ந்து வீயுமிடத்தை உயிர் வாழ்பவர் நண்ணுவரோ?

(விரி.) தலை மகன் செலவு - தலைமகன் பொருள் தேடச் செல்லுகின்ற செலவு. சார் - ஒரு வகை மரமுமாம். முருங்கை மரம் - நாரின்றி இலகுவில் முறிந்துவிடுந் தன்மையதாதலின், "நாரில் பூ நீண் முருங்கை," எனப்பட்டது. பாலைநில வழியானது வாழபவர் நண்ணா வொன்றாகலான், தலைவன் செல்லத்தக்க தில்லை என்று கூறியதாகு மிது.

(91)

செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிஃடுவன்றிக்
கொல்பபோற் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப்
பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடுங் கீழா
லடிவெந்து கண்சுடு மாறு.

[இதுவுமது]

(பத.) சிள் - சிள் வண்டுகள், துவன்றி - நெருங்கி, கொல்பபோல் - (கொடிய வொலியாலே பிறரைக்) கொல் வனபோல, கூப்பிடும் - ஒலிக்கும்படியானதும், வெம் கதிரோன் - வெப்ப மிக்க ஞாயிறு, மல்கி - மிகுந்து (எரிந்து,) பொடி - புழுதிகள், வெந்து - வேக்காடுற்று, பொங்கி - ஆவி கிளம்பி, மேல் - மேலே (சென்று,) வான் சுடும் - விசும்பினைக் கொதிக்கச் செய்வதும், கீழால் - தரையிலே, அடி - (செல்வார்) அடிகள், வெந்து - வேவ, கண் - (அவர்தம்) கண்களை, சுடும் - சுடச் செய்வதுமாகிய, ஆறு - பாலைநில வழியே, தம் அடைந்தார் - தம்மைப் பற்றுக்கோடாகக் கொண்ட மனைவிமார்கள், சீர் அழிய - சிறப்பழிந்து துன்புறும்படி, செல்பவோ - நல்லோராகிய கணவன்மார்கள் செல்வார்களோ? (செல்ல மாட்டார்கள், என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) தம்மை யடைந்தார் சீர்மையழிய நல்லார் செல்வரோ? சிள்வீடுகள் நெருங்கிக் கடிய வோசையாற் பிறரைக் கொல்வனபோலக் கூப்பிடாநிற்கும் வெய்ய