99

(விரி.) வாளா - சும்மா: ஒன்று மின்மைப்பொருள் தருமிடைச் சொல். எயிற்றாய், போர்த்தாலும், வாளா வென்றி, கண் வாள் இழந்த தோள் வனப்பிழந்த, என முடிக்க மெல்விரலும் இழந்த நாள் எண்மிக்கு (எண்ணி) நைந்து தோள் வனப்பிழந்த, எனக் கூட்டுக. மிக்கு - காரணப் பொருளில் வந்த வினையெச்சம். நைந்து - நைய: செயவென் எச்சத் திரிபு.

(99)

பண்டியையச் சொல்லிய சொற்பழுதான் மாக்கடல்
கண்டியைய மாந்திக்கால் வீழ்த்திருண் - டெண்டிசையுங்
கார்தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே
பீர்தோன்றி நீர்தோன்றுங் கண்.

[பருவங்கண்டழிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது]

(பத.) (தோழியே!) கார் - முகிற் கூட்டமானது, மா கடல் - பெருங்கடலினிடத்தே, கண்டு - முதலிற் காணப் பெற்று, இயைய - தன்னிடத்தே நிரம்பிப்பொருந்தும்படி, மாந்தி - கடனீரைக்குடித்து, இருண்டு - கருத்து, எண் திசையும் - எட்டுத் திக்குகளிலும், கால் வீழ்த்து - மழை பெய்ய இறங்கி, தோன்ற - காணப்பட்டும், காதலர் தேர் - தலைவரின் தேரானது, தோன்றாது - தோன்றுகின்றதில்லை, ஆகவே - ஆதலான், பண்டு - தலைவர் முன்பு நம்மைப் பிரிந்து சென்ற காலத்து, இயைய - நாம் இணங்கவேண்டியதற்காக, சொல்லிய - (கார்காலத்தில் திரும்பி வந்து விடுவதாகக்) குறிப்பிட்டுச் சொல்லிக்கொண்ட, சொல் - உறுதிமொழயானது, பழுது - தவறிப் போயிற்று, கண் - அதனால் என் கண்களும், பீர்தோன்றி - (என் மனத்தின் கண்உள்ள) அச்சந்தோன்றும்படி, நீர் தோன்றும் நீரைத் தோற்றுவியாநின்றன; (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)

(ப-ரை.) தாமுன்பு நம்மைப் பிரிகின்றநாட் குறிப்படச் சொல்லிய சொற்பழுதாயிற்றால்; பெருங்கடற் சென்று கண்டு நிரம்பப் பருகிக் கால்வீழ்த்தே யிருண்டு திசை யெட்டு மழை தோன்றக் காதலர் தேர் தோன்றுகின்றதில்லை: ஆதலால் என் கண்கள் பீர் தோன்ற நீர் தோன்றா நின்றன.