தொடக்கம் |
|
|
திணைமாலை நூற்றைம்பது
(கணிமேதாவியார்)
1. குறிஞ்சி
தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று, தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது | |
1. | நறை படர் சாந்தம் அற எறிந்து, நாளால் உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல்,-பிறை எதிர்ந்த தாமரைபோல் வாள் முகத்துத் தாழ்குழலீர்!-காணீரோ, ஏ மரை போந்தன ஈண்டு? | |
|
உரை
|
|
|
|
|
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது | |
2. | சுள்ளி, சுனை நீலம், சோபாலிகை, செயலை, அள்ளி அளகத்தின்மேல், ஆய்ந்து, தெள்ளி, இதணால் கடி ஒடுங்கா ஈர்ங் கடா யானை உதணால் கடிந்தான் உளன். | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு, தோழி செறிப்பு அறிவுறீஇயது | |
3. | சாந்தம் எறிந்து உழுத சாரல், சிறு தினை, சாந்தம் எறிந்த இதண் மிசை, சாந்தம் கமழக் கிளி கடியும் கார் மயில் அன்னாள் இமிழ, கிளி எழா, ஆர்த்து. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகள் இற்செறிந்த காலத்து, புனத்தின்கண் வந்த தலைமகன் தலைமகளைக் காணாது ஆற்றாது பெயர்கின்றான் சொல்லியது | |
4. | கோடாப் புகழ் மாறன் கூடல் அனையாளை ஆடா அடகினும் காணேன்; போர் வாடாக் கருங் கொல் வேல் மன்னர் கலம் புக்க கொல்லோ, மருங்குல் கொம்பு அன்னாள் மயிர்? | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி செறிப்பு அறிவுறீஇயது | |
5. | வினை விளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப் பனை விளைவு நாம் எண்ண, பாத்தித் தினை விளைய,- மை ஆர் தடங் கண் மயில் அன்னாய்!-தீத் தீண்டு கையார் பிரிவித்தல் காண்! | |
|
உரை
|
|
|
|
|
இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது | |
6. | மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து, அருவி மால் நீல மால் வரை நாட! கேள்: மா நீலம் காயும் வேற் கண்ணாள், கனை இருளில் நீ வர, ஆயுமோ? மன்ற, நீ ஆய்! | |
|
உரை
|
|
|
|
|
7. | கறி வளர் பூஞ் சாரல், கைந்நாகம் பார்த்து, நெறி வளர் நீள் வேங்கை கொட்கும்,-முறி வளர் நல் மலை நாட!-இர வரின், வாழாளால், நல் மலை நாடன் மகள். | |
|
உரை
|
|
|
|
|
பின்னிலை முனியாது நின்ற தலைமகன் தோழியை மதி உடம்படுத்தது | |
8. | அவட்குஆயின், ஐவனம் காவல் அமைந்தது; இவட்குஆயின், செந் தினை கார் ஏனல்; இவட்குஆயின், எண் உளவால், ஐந்து; இரண்டு ஈத்தான்கொல்? என் ஆம்கொல்? கண் உளவால், காமன் கணை! | |
|
உரை
|
|
|
|
|
பாங்கற்குத் தலைமகன் தலைமகளைக் கண்ட வகை கூறி, தன்ஆற்றாமை மிகுதி சொல்லியது | |
9. | வஞ்சமே என்னும் வகைத்தால்; ஓர் மா வினாய், தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்; என் நெஞ்சை நலம் கொண்டு ஆர் பூங் குழலாள், நன்று ஆயத்து, அன்று, என் வலம் கொண்டாள், கொண்டாள் இடம். | |
|
உரை
|
|
|
|
|
10. | கரு விரல், செம் முக, வெண் பல், சூல், மந்தி பரு விரலால் பைஞ் சுனை நீர் தூஉய், பெரு வரைமேல் தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட! வாரலோ, வான் தேவர் கொட்கும் வழி! | |
|
உரை
|
|
|
|
|
11. | கரவு இல் வள மலைக் கல் அருவி நாட! உர வில் வலியாய், ஒரு நீ, இரவின், வழிகள் தாம் சால வர அரிய; வாரல், இழி கடா யானை, எதிர்! | |
|
உரை
|
|
|
|
|
வெறி விலக்கி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது | |
12. | வேலனார் போக; மறி விடுக்க; வேரியும் பாலனார்க்கு ஈக;-பழியிலாள் பாலால் கடும் புனலின் நீந்தி, கரை வைத்தாற்கு அல்லால், நெடும் பணைபோல் தோள் நேராள், நின்று. | |
|
உரை
|
|
|
|
|
நெறியினது அருமை கூறி, தோழி இரவுக்குறி மறுத்தது | |
13. | ஒரு வரைபோல் எங்கும் பல வரையும் சூழ்ந்த அரு வரை உள்ளதாம் சீறூர்; வரு வரையுள் ஐ வாய நாகம்; புறம் எல்லாம், ஆயுங்கால், கை வாய நாகம் சேர் காடு. | |
|
உரை
|
|
|
|
|
செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது | |
14. | வருக்கை வள மலையுள், மாதரும் யானும், இருக்கை இதண் மேலேம் ஆக, பருக் கைக் கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால், தொடாஅவால், என் தோழி தோள். | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த இடத்து,தலைமகள் தந்தைக்கும் தனையன்மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது | |
15. | வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய்க் கோடாது நீர் கொடுப்பின் அல்லது, கோடா எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப் பொழிலும் விலை ஆமோ, போந்து? | |
|
உரை
|
|
|
|
|
தோழி சேட்படுத்த இடத்து, தலைமகன் தனது ஆற்றாமையால் சொல்லியது | |
16. | ‘நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி, தன் பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது, பூண் ஆகம்’ என்றேன்; இரண்டாவது உண்டோ? மடல் மாமேல், நின்றேன், மறுகிடையே நேர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
'நின்னால் சொல்லப்பட்டவளை அறியேனாலோ' என்ற தோழிக்குத் தலைமகன் அறிய உரைத்தது | |
17. | அறிகு அவளை; ஐய இடை, மடவாய்! ஆய, சிறிது அவள் செல்லாள், இறும் என்று அஞ்சிச் சிறிது, அவள் நல்கும்வாய் காணாது, நைந்து உருகி என் நெஞ்சம் ஒல்கும்வாய் ஒல்கல் உறும். | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது | |
18. | என் ஆம் கொல்?-ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப, பொன் ஆம், போர் வேலவர்தாம் புரிந்தது; என்னே! மருவி ஆம், மாலை மலை நாடன் கேண்மை; இருவியாம், ஏனல் இனி. | |
|
உரை
|
|
|
|
|
பின்னின்ற தலைமகன் தோழி குறை மறாமல் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது | |
19. | பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி, பல் பூப் பெய்- தாலொத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து, என் நெஞ்சம் வாய்ப் புக்கு ஒழிவு காண்பானோ, காண் கொடா? அம் சாயற்கே நோவல் யான். | |
|
உரை
|
|
|
|
|
20. | நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட! கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார்; கோள் வேங்கை அன்னையால் நீயும்; அருந் தழை யாம் ஏலாமைக்கு என்னையோ? நாளை எளிது. | |
|
உரை
|
|
|
|
|
ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏன்றுகொண்டு கையுறை எதிர்ந்தது | |
21. | ‘பொன் மெலியும் மேனியாள் பூஞ் சுணங்கு மென் முலைகள் என் மெலிய வீங்கினவே, பாவம்!’ என்று, என் மெலிவிற்கு? அண் கண்ணி வாடாமை, யான், ‘நல்ல’ என்றால், தான் உண்கண்ணி வாடாள் உடன்று. | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறிக்கண் தலைமகள் குறிப்பு இன்றிச் சார்கிலாத தலைமகன் தனது ஆற்றாமை சொல்லியது | |
22. | கொல் யானை வெண் மருப்பும், கொல் வல் புலி அதளும், நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம் ஓர் அம்பினான் எய்து போக்குவர்; யான் போகாமல், ஈர் அம்பினால் எய்தாய், இன்று. | |
|
உரை
|
|
|
|
|
'நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்' என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம் | |
23. | பெரு மலை தாம் நாடி, தேன் துய்த்து, பேணாது அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு நாண் அழிந்து, நல்ல நலன் அழிந்து, நைந்து உருகி, ஏண் அழிதற்கு யாம் ஏயினம். | |
|
உரை
|
|
|
|
|
தோழி குறை மறாமல் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது | |
24. | நறுந் தண் தகரம், வகுளம், இவற்றை வெறும் புதல்போல் வேண்டாது, வேண்டி, எறிந்து உழுது, செந் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு நொந்து இனைய வல்லேளா? நோக்கு! | |
|
உரை
|
|
|
|
|
தோழி தலைமகனை நெறி விலக்கி, வரைவு கடாயது | |
25. | கொல் இயல் வேழம், குயவரி கோட் பிழைத்து, நல் இயல் தம் இனம் நாடுவபோல், நல் இயல் நாம வேற் கண்ணாள் நடுநடுப்ப வாரலோ, ஏம வேல் ஏந்தி, இரா! | |
|
உரை
|
|
|
|
|
26. | கருங் கால் இள வேங்கை கான்ற பூக் கல்மேல் இருங் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால் மழை வளரும் சாரல் இர வரின், வாழாள், இழை வளரும் சாயல் இனி. | |
|
உரை
|
|
|
|
|
தோழி படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது | |
27. | பனி வரை நீள் வேங்கைப் பய மலை நல் நாட! ‘இனி வரையாய்’ என்று எண்ணிச் சொல்வேன்; முனி வரையுள் நின்றான் வலியாக நீ வர, யாய் கண்டாள்; ஒன்றாள், காப்பு ஈயும், உடன்று. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சொன்ன குறிவழியே சென்று, தலைமகளைக் கண்டு, பாங்கன் சொல்லியது | |
28. | மேகம் தோய் சாந்தம், விசை, திமிசு, காழ் அகில், நாகம் தோய் நாகம், என இவற்றைப் போக எறிந்து, உழுவார் தங்கை இருந் தடங்கண் கண்டும், மறிந்து உழல்வானோ, இம் மலை? | |
|
உரை
|
|
|
|
|
பகற்குறிக்கண் இடம் காட்டியது | |
29. | பலா எழுந்தபால் வருக்கைப் பாத்தி அதன் நேர் நிலா எழுந்த வார் மணல் நீடி, சுலா எழுந்து, கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூந் தண் பொதும்பர்- தான் நாறத் தாழ்ந்த இடம். | |
|
உரை
|
|
|
|
|
பாங்கற்குத் தலைமகன் கூறியது | |
30. | திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி, தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண், புனம் காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என் மனம் காக்க வைத்தார், மருண்டு. | |
|
உரை
|
|
|
|
|
தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லி, குறை நயப்பக் கூறியது | |
31. | தன் குறை இது என்னான், தழை கொணரும் தண் சிலம்பன் நின் குறை என்னும் நினைப்பினனாய், பொன் குறையும் நாள் வேங்கை நீழலுள் நண்ணான்; எவன்கொலோ, கோள் வேங்கை அன்னான் குறிப்பு? | |
|
உரை
|
|
|
|