தொடக்கம் |
|
|
4. முல்லைபருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது | |
93. | கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பெருங் கடல்- தன்போல் முழங்கி, தளவம் குருந்து அணைய, என்கொல், யான் ஆற்றும் வகை? | |
|
உரை
|
|
|
|
|
94. | பகல் பருகிப் பல் கதிர் ஞாயிறு கல் சேர, இகல் கருதித் திங்கள் இருளை, பகல் வர வெண் நிலாக் காலும் மருள் மாலை,-வேய்த்தோளாய்!- உள் நிலாது, என் ஆவி ஊர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
தோழி தலைமகளைப் பருவம் காட்டி வற்புறுத்தியது | |
95. | மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி, கான் ஓக்கம் கொண்டு, அழகா-காண், மடவாய்! மான் நோக்கி!- போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின்மேல் புரிய, சாதாரி நின்று அறையும், சார்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
96. | இருள் பரந்து ஆழியான்தன் நிறம்போல், தம்முன் அருள் பரந்த ஆய் நிறம் போன்று, மருள் பரந்த பால் போலும் வெண் நிலவும்,-பை அரவு அல்குலாய்!- வேல் போலும், வீழ் துணை இலார்க்கு. | |
|
உரை
|
|
|
|
|
97. | பாழிபோல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த ஆழிபோல் ஞாயிறு கல் சேர, தோழியோ! மால் மாலை, தம்முன் நிறம்போல் மதி முளைப்ப, யான், மாலை ஆற்றேன், இனைந்து. | |
|
உரை
|
|
|
|
|
'பருவம் அன்று' என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது | |
98. | வீயும்-வியன் புறவின் வீழ் துளியான், மாக் கடுக்கை; நீயும் பிறரொடும் காண், நீடாதே;-ஆயும் கழல் ஆகி, பொன் வட்டு ஆய், தார் ஆய், மடல் ஆய், குழல் ஆகி, கோல் சுரியாய், கூர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
99. | ‘பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும் என்? வாளா’ என்றி;-இலங்கு எயிற்றாய்!-என் வாள்போல் வாள் இழந்த, கண்; தோள் வனப்பு இழந்த; மெல் விரலும், நாள் இழந்த, எண் மிக்கு, நைந்து. | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த கிழத்தி, தோழிக்குச் சொல்லியது | |
100. | பண்டு இயையச் சொல்லிய சொல் பழுதால்; மாக் கடல் கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும் கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது; ஆகவே, பீர் தோன்றி, நீர் தோன்றும், கண். | |
|
உரை
|
|
|
|
|
101. | வண்டுஇனம் வௌவாத ஆம்பலும், வார் இதழான் வண்டுஇனம் வாய் வீழா மாலையும், வண்டுஇனம் ஆராத பூந் தார் அணி தேரான்தான் போத வாராத நாளே, வரும். | |
|
உரை
|
|
|
|
|
102. | மான் எங்கும் தம் பிணையோடு ஆட, மறி உகள, வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப, கான் எங்கும் தேன் இறுத்த வண்டோடு, ‘தீ, தா’ என, தேராது, யான் இறுத்தேன், ஆவி இதற்கு. | |
|
உரை
|
|
|
|
|
'பருவம் அன்று' என்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள், 'பருவமே' என்று அழிந்து சொல்லியது | |
103. | ஒருவந்தம் அன்றால், உறை முதிரா நீரால்; கருமம் தான் கண்டு அழிவுகொல்லோ?-'பருவம் தான் பட்டின்றே’ என்றி;-பணைத் தோளாய்!-கண்ணீரால் அட்டினேன், ஆவி அதற்கு. | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது | |
104. | ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை, இந்து உருவின் மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின் ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல், ‘பூக்கு’ என்று, கொன்றாய்! கொன்றாய், எற் குழைத்து. | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
105. | எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார், கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண்-முல்லை பெருந் தண் தளவொடு தம் கேளிரைப்போல், காணாய், குருந்தம் கொடுங்கழுத்தம் கொண்டு. | |
|
உரை
|
|
|
|
|
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது | |
106. | என்னரே, ஏற்ற துணை பிரிந்தார்? ‘ஆற்று’ என்பார் அன்னரே ஆவர், அவரவர்க்கு; முன்னரே வந்து, ஆரம், தேம் கா வரு முல்லை, சேர் தீம் தேன் கந்தாரம் பாடும், களித்து. | |
|
உரை
|
|
|
|
|
'பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது | |
107. | கரு உற்ற காயாக் கண மயில் என்று அஞ்சி, உரும் உற்ற பூங் கோடல் ஓடி, உரும் உற்ற ஐந் தலை நாகம் புரையும் அணிக் கார்தான் எம்தலையே வந்தது, இனி. | |
|
உரை
|
|
|
|
|
'பருவம் அன்று' என்று வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாது சொல்லியது | |
108. | கண் உளவாயின், முலை அல்லை, காணலாம்; எண் உளவாயின், இறவாவால்; எண் உளவா, அன்று ஒழிய, நோய் மொழிச் சார்வு ஆகாது;-உருமுடை வான் ஒன்று ஒழிய, நோய் செய்தவாறு. | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
109. | என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார் பொன்போல் தார் கொன்றை புரிந்தன;-பொன்போல் துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர்; தோன்றார், இணை பிரிந்து வாழ்வர், இனி. | |
|
உரை
|
|
|
|
|
110. | பெரியார் பெருமை பெரிதே!-இடர்க்கண் அரியார் எளியர் என்று, ஆற்றா, பரிவாய், தலை அழுங்க, தண் தளவம் தாம் நகக் கண்டு, ஆற்றா, மலை அழுத, சால மருண்டு. | |
|
உரை
|
|
|
|
|
111. | கானம் கடி அரங்கா, கைம்மறிப்பக் கோடலார், வானம் விளிப்ப, வண்டு யாழாக, வேனல், வளரா மயில் ஆட, வாட்கண்ணாய்! சொல்லாய், உளர் ஆகி, உய்யும் வகை. | |
|
உரை
|
|
|
|
|
பருவம் காட்டி, தோழி, தலைமகளை வற்புறுத்தியது | |
112. | தேரோன் மலை மறைய, தீம் குழல் வெய்து ஆக, வாரான் விடுவானோ?-வாட்கண்ணாய்!-கார் ஆர் குருந்தோடு முல்லை குலைத்தனகாண்; நாமும் விருந்தோடு நிற்றல், விதி. | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது | |
113. | பறி, ஓலை, மேலொடு கீழா, இடையர் பிறியோலை பேர்த்து, விளியா, கதிப்ப, நரி உளையும் யாமத்தும் தோன்றாரால்-அன்னாய்!- விரி உளை மான் தேர் மேல் கொண்டார். | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, தோழி குருந்த மரத்திற்குச் சொல்லுவாளாய், 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது | |
114. | பாத்து, படு கடல் மாந்தி, பல கொண்மூ, காத்து, கனை துளி சிந்தாமை, பூத்து- குருந்தே!-பருவம் குறித்து, இவளை, ‘நைந்து வருந்தே’ என்றாய், நீ வரைந்து. | |
|
உரை
|
|
|
|
|
வினை முற்றி மீண்ட தலைமகன், தலைமகட்குத் தூது விடுகின்றான், தூதிற்குச் சொல்லியது | |
115. | படும் தடங் கண் பல் பணைபோல் வான் முழங்கல் மேலும், கொடுந் தடங் கண் கூற்று மின் ஆக, நெடுந் தடங் கண் நீர் நின்ற நோக்கின்நெடும் பணை மென் தோளாட்கு, ‘தேர் நின்றது’ என்னாய், திரிந்து. | |
|
உரை
|
|
|
|
|
பருவம் கண்டு, ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது | |
116. | குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே! முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே, அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள் பெரும் பீர் பசப்பித்தீர், பேர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறுத்தியது | |
117. | கத நாகம் புற்று அடையக் கார் ஏறு சீற, மத நாகம் மாறு முழங்க, புதல் நாகம் பொன் பயந்த, வெள்ளி புறமாக;-பூங்கோதாய்!- என் பசந்த, மென் தோள், இனி? | |
|
உரை
|
|
|
|
|
'பருவம் அன்று' என்று, வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது | |
118. | கார் தோன்றிப் பூவுற்ற காந்தள் முகை, விளக்குப் பீர் தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல்; நீர் தோன்றி, தன் பருவம் செய்தது கானம்;-தடங் கண்ணாய்!- ‘என் பருவம் அன்று’ என்றி, என்று. | |
|
உரை
|
|
|
|
|
119. | ‘உகவும் கார் அன்று’ என்பார், ஊரார்; அதனைத் தகவும் தகவு அன்று என்று ஓரேன்; தகவேகொல்? வண் துடுப்பு ஆய், பாம்பு ஆய், விரல் ஆய், வளை முரி ஆய், வெண் குடை ஆம்,-தண் கோடல் வீந்து. | |
|
உரை
|
|
|
|
|
120. | ‘பீடு இலார்’ என்பார்கள் காணார்கொல்?-வெங் கதிரால் கோடு எலாம் பொன் ஆய்க் கொழுங் கடுக்கை, காடு எலாம், அத்தம் கதிரோன் மறைவதன்முன், வண்டொடு தேன், துத்தம் அறையும், தொடர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
121. | ஒருத்தி யான்; ஒன்று அல பல் பகை, என்னை விருத்தியாக் கொண்டன-வேறாப் பொருத்தின், மடல் அன்றில், மாலை, படு வசி, ஆம்பல், கடல், அன்றி, கார், ஊர், கறுத்து. | |
|
உரை
|
|
|
|
|
122. | கானம் தலைசெய, காப்பார் குழல் தோன்ற, ஏனம் இடந்த மணி எதிரே, வானம் நகுவதுபோல் மின் ஆட, நாணா என் ஆவி உகுவது போலும், உடைந்து. | |
|
உரை
|
|
|
|
|
குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழல் ஓசை அந்திமாலைப் பொழுதின்கண் கேட்டதனால்,துயர் உறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது | |
123. | இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்; உம்மையே ஆம் என்பார் ஓரார்காண்;-நம்மை எளியர் என நலிந்த ஈர்ங்குழலார், ஏடி! தெளியச் சுடப்பட்டவாறு! | |
|
உரை
|
|
|
|