தொடக்கம் |
|
|
1. | சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம் நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை-என்றும் அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின் வழிவந்தார்கண்ணே வனப்பு. | |
|
உரை
|
|
|
|
|
2. | கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான், மண்ணவர்க்கும் அன்றி,-மது மலி பூங் கோதாய்!- விண்ணவர்க்கும் மேலாய்விடும். | |
|
உரை
|
|
|
|
|
3. | தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல், அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன் துன்பம் துடைத்தல் அரிது. | |
|
உரை
|
|
|
|
|
4. | இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை, படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல், கண்டவர் காமுறும் சொல்,-காணின், கலவியின்கண் விண்டவர் நூல் வேண்டாவிடும். | |
|
உரை
|
|
|
|
|
5. | தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்; எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்;- சாலும், பிற நூலின் சால்பு. | |
|
உரை
|
|
|
|
|
6. | நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே, பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,- வேய் அன்ன தோளாய்!-இவை உடையான் பல் உயிர்க்கும் தாய் அன்னன் என்னத் தகும். | |
|
உரை
|
|
|
|
|
7. | இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும் வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல்,- முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்!-நாளும் விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து. | |
|
உரை
|
|
|
|
|
8. | உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்த்து, மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல்,-மற்று அவனை யாக்குமவர் யாக்கும், அணைந்து. | |
|
உரை
|
|
|
|
|
9. | கற்றாரைக் கற்றது உணரார் என மதியார், உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு உண்டி, உறையுள், உடுக்கை இவை ஈந்தார்- பண்டிதராய் வாழ்வார், பயின்று. | |
|
உரை
|
|
|
|
|
10. | செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல் அமைச்சர், தொழிலும், அறியலம்-ஒன்று ஆற்ற எனைத்தும் அறியாமையான். | |
|
உரை
|
|
|
|