தொடக்கம் |
|
|
11. | அவா அறுக்கல் உற்றான் தளரான்; அவ் ஐந்தின் அவா அறுப்பின், ஆற்ற அமையும்; அவா அறான்- ஆகும் அவனாயின், ஐங் களிற்றின் ஆட்டுண்டு, போகும், புழையுள் புலந்து. | |
|
உரை
|
|
|
|
|
12. | கொலைக் களம், வார் குத்து, சூது ஆடும் எல்லை, அலைக் களம், போர் யானை ஆக்கும் நிலைக்களம், முச் சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும்,-இன்னவை நச்சாமை, நோக்காமை, நன்று. | |
|
உரை
|
|
|
|
|
13. | விளையாமை, உண்ணாமை, ஆடாமை, ஆற்ற உளையாமை, உட்குடைத்தா வேறல், களையாமை,- நூல் பட்டு ஆர் பூங்கோதாய்!-நோக்கின், இவை ஆறும் பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு. | |
|
உரை
|
|
|
|
|
14. | பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயன செய்யான், சிறியார் இனம் சேரான், வையான்,- கயல் இயல் உண் கண்ணாய்!-கருதுங்கால், என்றும் அயல, அயலவர் நூல். | |
|
உரை
|
|
|
|
|
15. | கண் போல்வார்க் காயாமை; கற்றார், இனம் சேர்தல்; பண் போல் கிளவியார்ப் பற்றாமை; பண் போலும் சொல்லார்க்கு அரு மறை சோராமை; சிறிது எனினும் இல்லார்க்கு இடர் தீர்த்தல்,-நன்று. | |
|
உரை
|
|
|
|
|
16. | துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல், இறந்தார்க்கு இனிய இசைத்தல், இறந்தார், மறுதலை, சுற்றம், மதித்து ஓம்புவானேல், இறுதல் இல் வாழ்வே இனிது. | |
|
உரை
|
|
|
|
|
17. | குடி ஓம்பல், வன்கண்மை, நூல் வன்மை, கூடம், மடி ஓம்பும் ஆற்றல் உடைமை, முடி ஓம்பி, நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் தேற்றானேல், தேறும் அமைச்சு. | |
|
உரை
|
|
|
|
|
18. | போகம், பொருள் கேடு, மான் வேட்டம், பொல்லாக் கள், சோகம் படும் சூதே, சொல்வன்மை, சோகக் கடுங் கதத்துத் தண்டம், அடங்காமை காப்பின், அடும் கதம் இல், ஏனை அரசு. | |
|
உரை
|
|
|
|
|
19. | கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் பொருள்மேல் செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும் மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை- இறையில் பெரியாற்கு இவை. | |
|
உரை
|
|
|
|
|
20. | மின் நேர் இடையார் சொல் தேறான், விழைவு ஓரான், கொன்னே வெகுளான், கொலை புரியான்,-பொன்னே!- உறுப்பு அறுத்தன்ன கொடை உவப்பான், தன்னின் வெறுப்பு அறுத்தான்-விண்ணகத்தும் இல். | |
|
உரை
|
|
|
|