தொடக்கம் |
|
|
31. | மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த் தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி புத்ரன், அபவித்தனொடு, பொய் இல் உபகிருதன், இத் திறத்த,-எஞ்சினார் பேர். | |
|
உரை
|
|
|
|
|
32. | உரையான், குலன், குடிமை; ஊனம் பிறரை உரையான்; பொருளோடு, வாழ்வு, ஆயு, உரையானாய்,- பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய்!-ஈத்து உண்பான் தேவாதி தேவனாத் தேறு! | |
|
உரை
|
|
|
|
|
33. | பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும், மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான்,- கூந்தல் மயில் அன்னாய்!-குழீஇய வான் விண்ணோர்க்கு வேந்தனாம், இவ் உலகம் விட்டு. | |
|
உரை
|
|
|
|
|
34. | சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான், இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக் கூடுவது ஈவானை,-கொவ்வைபோல் செவ் வாயாய்!- நாடுவர், விண்ணோர், நயந்து. | |
|
உரை
|
|
|
|
|
35. | துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாது இறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும்,- பண் ஆளும் சொல்லாய்!-பழி இல் ஊன் பாற்படுத்தான், மண் ஆளும், மன்னனாய் மற்று. | |
|
உரை
|
|
|
|
|
36. | கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும் பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும் ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால் வீழப்படுவார், விரைந்து. | |
|
உரை
|
|
|
|
|
37. | அழப் போகான், அஞ்சான், அலறினால் கேளான், எழப் போகான், ஈடு அற்றார் என்றும் தொழப் போகான், என்னே, இக் காலன்! நீடு ஓரான், தவம் முயலான், கொன்னே இருத்தல் குறை. | |
|
உரை
|
|
|
|
|
38. | எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால், நேராமை சால உணர்வார் பெருந் தவம் போகாமை, சாலப் புலை. | |
|
உரை
|
|
|
|
|
39. | சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண் சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய் வேறல் எளிது; அரிது, சொல். | |
|
உரை
|
|
|
|
|
40. | உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரை அலையாமை, ஐயப்படாமை, நிலையாமை தீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான், நோக்கும் வாய் விண்ணின் உயர்வு. | |
|
உரை
|
|
|
|