தொடக்கம் |
|
|
41. | குறுகான், சிறியாரை; கொள்ளான், புலால்; பொய் மறுகான்; பிறர் பொருள் வௌவான்; இறுகானாய், ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின், நெறி நூல்கள் பாடு இறப்ப, பன்னும் இடத்து. | |
|
உரை
|
|
|
|
|
42. | கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான், புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான், குடிப் படுத்துக் கூழ் ஈந்தான்,-கொல் யானை ஏறி அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு. | |
|
உரை
|
|
|
|
|
43. | சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும் வாது உவவான், மாதரார் சொல் தேறான்,-காது தாழ் வான் மகர வார் குழையாய்!-மா தவர்க்கு ஊண் ஈந்தான்- தான் மகர வாய் மாடத்தான். | |
|
உரை
|
|
|
|
|
44. | பொய்யான், பொய் மேவான், புலால் உண்ணான், யாவரையும் வையான், வழி சீத்து, வால் அடிசில் நையாதே ஈத்து, உண்பான் ஆகும்-இருங் கடல் சூழ் மண் அரசாய்ப் பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு. | |
|
உரை
|
|
|
|
|
45. | இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்; வழுக்கான், மனை; பொருள் வௌவான்; ஒழுக்கத்தால் செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்;-அரசு ஆண்டு வெல்வான் விடுப்பான் விரைந்து. | |
|
உரை
|
|
|
|
|
46. | களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான், ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து. | |
|
உரை
|
|
|
|
|
47. | பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று, பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல் தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான்- மாறான், மண் ஆளுமாம் மற்று. | |
|
உரை
|
|
|
|
|
48. | வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான், தன் இல்லுள் சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம் கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய், வாளால் மண் ஆண்டு வரும். | |
|
உரை
|
|
|
|
|
49. | யானை, குதிரை, பொன், கன்னியே, ஆனிரையோடு, ஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால் எண்ணம் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான்-வைசிர- வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து. | |
|
உரை
|
|
|
|
|
50. | எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை, வள்ளே, துணியே, இவற்றொடு, கொள் என, அன்புற்று, அசனம் கொடுத்தான்-துணையினோடு இன்புற்று வாழ்வான், இயைந்து. | |
|
உரை
|
|
|
|