தொடக்கம் |
|
|
71. | நடப்பார்க்கு ஊண், நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண், கிடப்பார்க்கு ஊண், கேளிர்க்கு ஊண், கேடு இன்று உடல் சார்ந்த வானகத்தார்க்கு ஊணே, மறுதலையார்க்கு ஊண், அமைத்தான்- தான் அகத்தே வாழ்வான், தக. | |
|
உரை
|
|
|
|
|
72. | உணராமையால் குற்றம்; ஓத்தான் வினை ஆம்; உணரான் வினைப் பிறப்புச் செய்யும்; உணராத தொண்டு இருந் துன்பம் தொடரும்; பிறப்பினான் மண்டிலமும் ஆகும்; மதி. | |
|
உரை
|
|
|
|
|
73. | மனை வாழ்க்கை, மா தவம், என்று இரண்டும், மாண்ட வினை வாழ்க்கை ஆக விழைப; மனை வாழ்க்கை பற்றுதல்; இன்றி விடுதல், முன் சொல்லும்; மேல் பற்றுதல், பாத்து இல் தவம். | |
|
உரை
|
|
|
|
|
74. | இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும், நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால் கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு. | |
|
உரை
|
|
|
|
|
75. | அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி, மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின் மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே- ஆசாரியனது அமைவு. | |
|
உரை
|
|
|
|
|
76. | ஒல்லுவ, நல்ல உருவ, வேல் கண்ணினாய்!. வல்லுவ நாடி, வகையினால், சொல்லின், கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்; அடையாத் தவத்தினால் வீடு. | |
|
உரை
|
|
|
|
|
77. | நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான், பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின் எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ், வல்லை வீடு ஆகும்; வகு! | |
|
உரை
|
|
|
|
|
78. | தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி, வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார், கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்;- வைத்து வழங்கி வாழ்வார். | |
|
உரை
|
|
|
|
|
79. | சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே, நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக் காட்ட, நட்டார்க்கு இயையின், தமக்கு இயைந்த கூறு, உடம்பு அட்டார்வாய்ப் பட்டது பண்பு. | |
|
உரை
|
|
|
|
|
80. | புலையாளர், புண்பட்டார், கண் கெட்டார், போக்கு இல் நிலையாளர், நீர்மை இழந்தார், தலையாளர்க்கு ஊண் கொடுத்து, ஊற்றாய் உதவினார்-மன்னராய்க்- காண் கொடுத்து வாழ்வார், கலந்து. | |
|
உரை
|
|
|
|