தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 1 முதல் 10 வரை
|
|
|
1. | நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் இனத்தாரோடு நட்டல்,-இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. | |
|
உரை
|
|
|
|
|
2. | பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு, நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை, இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப-என்றும் ஒழுக்கம் பிழையாதவர். | |
|
உரை
|
|
|
|
|
3. | தக்கணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும் முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால், எப் பாலும் ஆகா, கெடும். | |
|
உரை
|
|
|
|
|
4. | ‘வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும் நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின் தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே- முந்தையோர் கண்ட முறை. | |
|
உரை
|
|
|
|
|
5. | ‘எச்சிலார், தீண்டார்-பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந் தலையோடு, இவை’ என்ப; யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள். | |
|
உரை
|
|
|
|
|
6. | எச்சிலார், நோக்கார்-புலை, திங்கள், நாய், நாயிறு, அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும்,தெற்றென, நன்கு அறிவார், நாளும், விரைந்து. | |
|
உரை
|
|
|
|
|
7. | எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள், இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்- விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. | |
|
உரை
|
|
|
|
|
8. | நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து, ஓதார், உரையார், வளராரே,-எஞ் ஞான்றும் மேதைகள் ஆகுறுவார். | |
|
உரை
|
|
|
|
|
9. | நாள் அந்தி, கோல் தின்று, கண் கழீஇ, தெய்வத்தைத் தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி நின்று தொழுதல் பழி. | |
|
உரை
|
|
|
|
|
10. | தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை, உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது, வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள் மெய் உறல், ஏனை மயல் உறல்,-ஈர்-ஐந்தும் ஐயுறாது, ஆடுக, நீர்! | |
|
உரை
|
|
|
|