ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 11 முதல் 20 வரை
 
11. உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்;-என்பதே
முந்தையோர் கண்ட முறை.
உரை
   
12. தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து.
உரை
   
13. நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா,
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை.
உரை
   
14. நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,-
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர்.
உரை
   
15. ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், நாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும்.
உரை
   
16. ‘அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைத் போலத் தொழுது எழுக!’ என்பதே-
யாவரும் கண்ட நெறி.
உரை
   
17. ‘குரவர் உரை இகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறை உவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்’ என்பதே-
நல் அறிவாளர் துணிவு.
உரை
   
18. நீராடி, கால் கழுவி, வாய் பூசி, மண்டலம் செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய் பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார், அரக்கர், குறித்து.
உரை
   
19. ‘காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை ஏறற்க!’ என்பதே-
பேர் அறிவாளர் துணிவு.
உரை
   
20. உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிது யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகா அமை நன்கு!
உரை