தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 21 முதல் 30 வரை
|
|
|
21. | விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை, இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே-என்றும் ஒழுக்கம் பிழையாதவர். | |
|
உரை
|
|
|
|
|
22. | ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல; முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார், முகட்டு வழி கட்டில் பாடு. | |
|
உரை
|
|
|
|
|
23. | கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்; சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்; இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று! | |
|
உரை
|
|
|
|
|
24. | முன் துவ்வார்; முன் எழார்; மிக்கு உறார்; ஊணின்கண் என் பெறினும் ஆற்ற வலம் இரார்;-தம்மின் பெரியார் தம்பால் இருந்தக்கால். | |
|
உரை
|
|
|
|
|
25. | கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப, மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக, துய்க்க, முறை வகையால், ஊண். | |
|
உரை
|
|
|
|
|
26. | முதியவரைப் பக்கத்து வையார்; விதி முறையால் உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து, அன்பின் திரியாமை, ஆசாரம் நீங்காமை, பண்பினால் நீக்கல், கலம்! | |
|
உரை
|
|
|
|
|
27. | இழியாமை நன்கு உமிழ்ந்து, எச்சில் அற வாய் அடியோடு நன்கு துடைத்து, வடிவு உடைத்தா முக் கால் குடித்துத் துடைத்து, முகத்து உறுப்பு ஒத்த வகையால் விரல் உறுத்தி, வாய்பூசல்- மிக்கவர் கண்ட நெறி. | |
|
உரை
|
|
|
|
|
28. | இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால், கொள்ளார், கொடாஅர் குரவர்க்கு; இரு கை சொறியார், உடம்பு மடுத்து. | |
|
உரை
|
|
|
|
|
29. | அந்திப் பொழுது கிடவார், நடவாரே; உண்ணார், வெகுளார், விளக்கு இகழார்; முன் அந்தி அல்கு உண்டு அடங்கல் வழி. | |
|
உரை
|
|
|
|
|
30. | கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது, வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள் உடல் கொடுத்து, சேர்தல் வழி. | |
|
உரை
|
|
|
|