தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 31 முதல் 40 வரை
|
|
|
31. | இரு தேவர், பார்ப்பார் இடை போகார்; தும்மினும், மிக்கார் வழுத்தின், தொழுது எழுக! ஒப்பார்க்கு உடன் செல்க, உள்ளம் உவந்து! | |
|
உரை
|
|
|
|
|
32. | புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம், தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும் சோரார்-உணர்வு உடையார். | |
|
உரை
|
|
|
|
|
33. | பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்; பகல் பெய்யார், தீயினுள் நீர். | |
|
உரை
|
|
|
|
|
34. | பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின், அந்தரத்து அல்லால், உமிவோடு இரு புலனும், இந்திர தானம் பெறினும், இகழாரே- ‘தந்திரத்து வாழ்தும்!’ என்பார். | |
|
உரை
|
|
|
|
|
35. | நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்; வழி, நிலை நீருள்ளும் பூசார்; மனத்தால் வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால் பெய் பூச்சுச் சீராது எனின். | |
|
உரை
|
|
|
|
|
36. | சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்; இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்; படை வரினும், ஆடை வளி உறைப்பப் போகார்; பலர் இடை ஆடை உதிராரே;-என்றும் கடன் அறி காட்சியவர். | |
|
உரை
|
|
|
|
|
37. | பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார்-திறன் இலர் என்று எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச் செல்வுழி உய்த்திடுதலால். | |
|
உரை
|
|
|
|
|
38. | பொய், குறளை, வௌவல், அழுக்காறு இவை நான்கும் ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின், ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்; தெய்வமும் செற்றுவிடும். | |
|
உரை
|
|
|
|
|
39. | தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்; அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி ஊட்டினமை கண்டு உண்க, ஊண்! | |
|
உரை
|
|
|
|
|
40. | உயர்ந்ததின் மேல் இரார்;-உள் அழிவு செய்யார், இறந்து இன்னா செய்தக்கடைத்தும்;-குரவர், இளங் கிளைகள் உண்ணும் இடத்து. | |
|
உரை
|
|
|
|