ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 41 முதல் 50 வரை
 
41. கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்;
புண்ணியம் ஆய தலையோடு உறுப்பு உறுத்த!-
நுண்ணிய நூல் உணர்வினார்.
உரை
   
42. ‘தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க!’ என்பதே-
பேர் அறிவாளர் துணிவு.
உரை
   
43. உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி,
மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள்,
அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும்
ஒட்டார்-உடன் உறைவின்கண்.
உரை
   
44. நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்;
கோடி கடையுள் விரியார்; கடைத்தலை,
ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்-
தம் தலைக்கண் நில்லாவிடல்!
உரை
   
45. துடைப்பம், துகட்காடு, புல் இதழ், செத்தல்
கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்,
பரப்பற்க, பந்தரகத்து!
உரை
   
46. காட்டுக் களைந்து, கலம் கழீஇ, இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து,
இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க-
நல்லது உறல் வேண்டுவார்!
உரை
   
47. அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும்,
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை,-பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள்.
உரை
   
48. கலியாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி, என்று
ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க!
பெய்க, விருந்திற்கும் கூழ்!
உரை
   
49. உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும்-
நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும், தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்!
உரை
   
50. பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்;-தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர்.
உரை