தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 51 முதல் 60 வரை
|
|
|
51. | மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும், தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன் முன் ஒளியும் பின் ஒளியும் அற்று. | |
|
உரை
|
|
|
|
|
52. | படிறும், பயனிலவும், பட்டி உரையும், வசையும், புறனும் உரையாரே-என்றும் அசையாத உள்ளத்தவர். | |
|
உரை
|
|
|
|
|
53. | தெறியொடு, கல்லேறு, விளை, விளியே, விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம் பயிற்றார்-நெறிப்பட்டவர். | |
|
உரை
|
|
|
|
|
54. | முறுவல் இனிதுரை, கால் நீர், மணை, பாய், கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப-தலைச் சென்றார்க்கு ஊணொடு செய்யும் சிறப்பு. | |
|
உரை
|
|
|
|
|
55. | கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும் நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும், குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும்,- நிகர் இல் அறிவினார் வேண்டார்-பலர் தொகு நீர்க்கரையும், நீடு நிலை. | |
|
உரை
|
|
|
|
|
56. | முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்; துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக் கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி, நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே, தொல் வரவின் தீர்ந்த தொழில். | |
|
உரை
|
|
|
|
|
57. | பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும், ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும், தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்;- நோய் இன்மை வேண்டுபவர். | |
|
உரை
|
|
|
|
|
58. | எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும், ‘எங்கு உற்றுச் சேறிரோ?’ என்னாரே; முன் புக்கு, எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்; கொள்வர், குரவர் வலம். | |
|
உரை
|
|
|
|
|
59. | ‘உடம்பு நன்று!’ என்று உரையார்; ஊதார், விளக்கும்; அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார்; அதனைப் படக் காயார், தம்மேல் குறித்து. | |
|
உரை
|
|
|
|
|
60. | யாதொன்றும் ஏறார், செருப்பு; வெயில் மறையார்;- ஆன்று அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு ஓர் ஆறு செல்லும் இடத்து. | |
|
உரை
|
|
|
|