தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 61 முதல் 70 வரை
|
|
|
61. | வால் முறையான் வந்த நான் மறையாளரை மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல்- நூல் முறையாளர் துணிவு. | |
|
உரை
|
|
|
|
|
62. | கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு, ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை சாரத்தால் சொல்லிய மூன்று. | |
|
உரை
|
|
|
|
|
63. | துறந்தாரைப் பேணலும், நாணலும், தாம் கற்ற மறந்தும் குரவர் முன் சொல்லாமை, மூன்றும், திறம் கண்டார் கண்ட நெறி. | |
|
உரை
|
|
|
|
|
64. | பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார், மூத்தார், இளையார், பசு, பெண்டிர், என்று இவர்கட்கு ஆற்ற வழி விலங்கினாரே-பிறப்பினுள் போற்றி எனப்படுவார். | |
|
உரை
|
|
|
|
|
65. | ஈன்றாள், மகள், தன் உடன்பிறந்தாள் ஆயினும், சான்றார் தமித்தா உறையற்க-ஐம் புலனும் தாங்கற்கு அரிது ஆகலான்! | |
|
உரை
|
|
|
|
|
66. | கடை விலக்கின், காயார்; கழி கிழமை செய்யார்; கொடை அளிக்கண் பொச்சாவார்; கோலம் நேர் செய்யார்; இடை அறுத்துப் போகி, பிறன் ஒருவற் சேரார்;- ‘கடைபோக வாழ்தும்!’ என்பார். | |
|
உரை
|
|
|
|
|
67. | தமக்கு உற்ற கட்டுரையும், தம்மின் பெரியார் உரைத்ததற்கு உற்ற உரையும், அஃது அன்றிப் பிறர்க்கு உற்ற கட்டுரையும், சொல்லற்க! சொல்லின், வடுக் குற்றம் ஆகிவிடும். | |
|
உரை
|
|
|
|
|
68. | பெரியார் உவப்பன தாம் உவவார்; இல்லம் சிறியாரைக் கொண்டு புகாஅர்; அறிவு அறியாப் பிள்ளையேயானும் இழித்து உரையார், தம்மோடு அளவளாவு இல்லா இடத்து. | |
|
உரை
|
|
|
|
|
69. | முனியார்; துனியார்; முகத்து எதிர் நில்லார்; தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்; ‘இனியவை யாம் அறிதும்!’ என்னார்; கசிவு இன்று, காக்கை வெள்ளென்னும் எனின். | |
|
உரை
|
|
|
|
|
70. | உமிவும், உயர்ந்துழி ஏறலும், பாக்கும், வகை இல் உரையும், வளர்ச்சியும், ஐந்தும் புணரார்-பெரியாரகத்து. | |
|
உரை
|
|
|
|