ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 71 முதல் 80 வரை
 
71. இறைவர் முன், செல்வமும், கல்வியும், தேசும்,
குணனும், குலம் உடையார் கூறார்-பகைவர்போல்
பாரித்து, பல் கால் பயின்று.
உரை
   
72. பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்,-
வணங்கார்-குரவரையும் கண்டால்; அணங்கொடு
நேர் பெரியார் செல்லும் இடத்து.
உரை
   
73. நகையொடு, கொட்டாவி, காறிப்பு, தும்மல்,
இவையும் பெரியார் முன் செய்யாரே; செய்யின்,
அசையாது, நிற்கும் பழி.
உரை
   
74. நின்றக்கால் நிற்க, அடக்கத்தால்! என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார்; பெருந்தக்கார்
சொல்லின், செவி கொடுத்துக் கேட்டீக! மீட்டும்
வினாவற்க, சொல் ஒழிந்தக்கால்!
உரை
   
75. உடுக்கை இகவார், செவி சொறண்டார்; கை மேல்-
எடுத்து உரையார்; பெண்டிர்மேல் நோக்கார்; செவிச் சொல்லும்
கொள்ளார்;-பெரியார் அகத்து.
உரை
   
76. விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய
பரந்து உரையார்; பாரித்து உரையார்;-ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால்
சொல்லுக செவ்வி அறிந்து!
உரை
   
77. தம் மேனி நோக்கார்; தலை உளரார்; கைந் நொடியார்,
எம் மேனி ஆயினும் நோக்கார், தலைமகன்-
தன் மேனி அல்லால் பிற.
உரை
   
78. பிறரொடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச்
சாரார்; செவி ஓரார்; சாரின், பிறிது ஒன்று
தேர்வார்போல் நிற்க, திரிந்து!
உரை
   
79. துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும், அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமை,-இம் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.
உரை
   
80. தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார்; இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர்; பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார்; புலையரையும்
நன்கு அறிவார் கூறார், முறை.
உரை