தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 81 முதல் 90 வரை
|
|
|
81. | புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை, இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத் தொழிற்கு உரியர் அல்லாதவர். | |
|
உரை
|
|
|
|
|
82. | வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம், ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி, மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே;-பெண்டிர்க்கு உவப்பன வேறாய்விடும். | |
|
உரை
|
|
|
|
|
83. | நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்; உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்; அரசர் படை அளவும் சொல்லாரே;-என்றும், ‘கடைபோக வாழ்தும்!’ என்பார். | |
|
உரை
|
|
|
|
|
84. | அளை உறை பாம்பும், அரசும், நெருப்பும், முழை உறை சீயமும் என்று இவை நான்கும், இளைய, எளிய, பயின்றன, என்று எண்ணி, இகழின் இழுக்கம் தரும். | |
|
உரை
|
|
|
|
|
85. | அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை, இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார் மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல், மன்னிய செல்வம் கெடும். | |
|
உரை
|
|
|
|
|
86. | உண்டது கேளார், குரவரை, மிக்காரை, கண்டுழி; கண்டால், முகம் திரியார், புல்லரையும் உண்டது கேளார் விடல்! | |
|
உரை
|
|
|
|
|
87. | கிடந்தாரைக் கால் கழுவார்; பூப்பெய்யார்; சாந்தம் மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்; கிடந்தார்கண் நில்லார், தாம்-கட்டில்மிசை. | |
|
உரை
|
|
|
|
|
88. | உதவிப் பயன் உரையார்; உண்டி பழியார்; அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்;- ‘திறத்துளி வாழ்தும்!’ என்பார். | |
|
உரை
|
|
|
|
|
89. | எய்தாத வேண்டார்; இரங்கார், இழந்ததற்கு; கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்;- மெய்யாய காட்சியவர். | |
|
உரை
|
|
|
|
|
90. | தலைக்கு இட்ட பூ மேவார்; மோந்த பூச் சூடார்; பசுக் கொடுப்பின், பார்ப்பார் கைக் கொள்ளாரே; என்றும் புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்! | |
|
உரை
|
|
|
|