தொடக்கம் |
ஆசாரக்கோவை பாடல் தொகுப்பு 91 முதல் 100 வரை
|
|
|
91. | மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தம், தாள் இசைப்பு, காட்டுளேயானும், பழித்தார்-மரம் தம்மின் மூத்த உள, ஆகலான். | |
|
உரை
|
|
|
|
|
92. | தலைஇய நற் கருமம் செய்யுங்கால், என்றும், புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார்; தொலைவு இல்லா அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க-அவர் வாய்ச்சொல் என்றும் பிழைப்பது இல! | |
|
உரை
|
|
|
|
|
93. | மன்றத்து நின்று உஞற்றார்; மாசு திமிர்ந்து இயங்கார்; என்றும் கடுஞ் சொல் உரையார்; இருவராய் நின்றுழியும் செல்லார்;-விடல்! | |
|
உரை
|
|
|
|
|
94. | கை சுட்டிக் கட்டுரையார்; கால்மேல் எழுத்து இடார், மெய் சுட்டி, இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்; கையில் குரவர் கொடுப்ப, இருந்து ஏலார்;- ஐயம் இல் காட்சியவர். | |
|
உரை
|
|
|
|
|
95. | தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும், பொன்னினைப்போல் போற்றிக் காத்து, உய்க்க! உய்க்காக்கால், மன்னிய ஏதம் தரும். | |
|
உரை
|
|
|
|
|
96. | நந்து, எறும்பு, தூக்கணம்புள், காக்கை என்று இவைபோல், தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம் அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம் எப் பெற்றியானும் படும். | |
|
உரை
|
|
|
|
|
97. | தொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி, பெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்- கண்ணுளே நோக்கி உரை! | |
|
உரை
|
|
|
|
|
98. | சூதர் கழகம், அரவம் அறாக் களம், பேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல், ஏதம் பலவும் தரும். | |
|
உரை
|
|
|
|
|
99. | உரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும்,- நடுக்கு அற்ற காட்சியார்-நோக்கார், எடுத்து இசையார், இல்லம் புகாஅர்; விடல்! | |
|
உரை
|
|
|
|
|
100. | அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான், இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான், அரசர் தொழில் தலைவைத்தான், மணாளன் என்று ஒன்பதின்மர் கண்டீர்-உரைக்குங்கால் மெய்யான் ஆசாரம் வீடு பெற்றார். | |
|
உரை
|
|
|
|