2. பாலை
13. கடுகி அதர் அலைக்கும் கல் சூழ் பதுக்கை
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும்
நெடு இடை அத்தம் செலவு உரைப்பக் கேட்டே,
வடுவிடை மெல்கின, கண்.
   
14. கத நாய் துரப்ப... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ...யவிழும்
புதல் மாறு வெங் கானம் போக்கு உரைப்ப, நில்லா,
முதன் ... ... ... ... ... ...
   
15. ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
கடுங் கதிர் வெங் கானம் பல் பொருட்கண் சென்றார்,
கொடுங் கல் மலை... ... ... ... ... ... ... ...
   
16. ... ... ... ...வுறையும் மெல்லென் கடத்து,... ... ...
கடுஞ் சின வேங்கை கதழ் வேழம் சாய்க்கு
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ...நமர்.
   
17. கடமா இரிந்தோடும் கல் அதர் அத்தம்,
மட மா இரும்பிடி வேழ மரு ... ... ... ... ... ...
... ... ... ...ண்ட வுண் கண்ணுள் நீர்... ... ... ...
... ... ... ... ... ... ... ...
   
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
18. ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை,
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும்
தாம் மாண்பு இல் வெஞ் சுரம் சென்றார் வரக் கண்டு,
வாய் மாண்ட பல்லி படும்.
   
[19, 20- ஆம் பாடல்களின் துறைக் குறிப்புகள் மறைந்துபட்டன.]
19. அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல்,
செருக்கு இல் கடுங் களிறு சென்று உறங்கி நிற்கும்,
பரல் கானம் பல் பொருட்குச் சென்றார் வருவர்;
நுதற்கு இவர்ந்து ஏறும், ஒளி.
   
20. ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... விழ்க்கும்
ஓவாத வெங் கானம் சென்றார்... ... ... ... ...
... ... ... வார் வருவார், நமர்.
   
பிரிவிடை ஆற்றாத தலைவி தோழிக்குச் சொல்லியது
21. ஆந்தை குறுங்கலி கொள்ள, நம் ஆடவர்
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின்,-
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய்!-என் நெஞ்சு
நீந்தும், நெடு இடைச் சென்று.
   
பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
22. கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம் பிரிந்தமை நீ அறிதி;-ஒள்ளிழாய்!-
தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்து, அவர்
வல்லை நாம் காணும் வரவு.
   
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு,
'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
23. சிலை ஒலி வெங் கணையர், சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்றுப்போல், ஓடும்
இலை ஒலி வெங் கானத்து, இப் பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல்-தோழி!-நமர்?
   
24. வெஞ் சுரம் தேர் ஓட வெஃகி நின்று, அத்த மாச்
சிந்தையால் நீர் என்று செத்து, தவா ஓடும்
பண்பு இல் அருஞ் சுரம் என்பவால்-ஆய்தொடி!-
நண்பு இலார் சென்ற நெறி.