தொடக்கம் |
|
|
49. | நாவாய் வழங்கு நளி திரைத் தண் கடலுள் ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறாக்குப்பை! பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய்-பரியாது, நோயால் நுணுகியவாறு. | |
|
உரை
|
|
|
|
|
50. | நெடுங் கடல் தண் சேர்ப்ப! நின்னோடு உரையேன்; ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்; கடுஞ் சூளின் தான் கண்டு, கானலுள் மேயும் தடந் தாள் மட நாராய்! கேள். | |
|
உரை
|
|
|
|
|
51. | மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய்! அணி நலம் உண்டு இறந்து, (ந)ம் அருளா விட்ட துணி முந்நீர்ச் சேர்ப்பற்குத் தூதோடு வந்த பணி மொழிப் புள்ளே! பற. | |
|
உரை
|
|
|
|
|
52. | அன்னையும் இல் கடிந்தாள்; யாங்கு இனி யாம் என் செய்கம்? புன்னையங் கானலுள் புக்கு இருந்தும் நின்னை நினையான் துறந்த நெடுங் கழிச் சேர்ப்பற்கு உரையேனோ, பட்ட பழி? | |
|
உரை
|
|
|
|
|
53. | அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர் நிலவு நெடுங் கானல் நீடார் துறந்தார்; புலவு மீன் குப்பை கவரும் துறைவன் கலவான்கொல், தோழி! நமக்கு? | |
|
உரை
|
|
|
|
|
காமம் மிக்க கழிபடர் கிளவி | |
54. | என்னையர் தந்த இற உணங்கல் யாம் கடிந்து, புன்னையங் கானல் இருந்தேமா, பொய்த்து எம்மைச் சொல் நலம் கூறி, நலன் உண்ட சேர்ப்பனை என்னைகொல் யாம் காணுமாறு? | |
|
உரை
|
|
|
|
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுப்புண்ட தலைமகள் சொல்லியது | |
55. | கொக்கு ஆர் கொடுங் கழிக் கூடு நீர்த் தண் சேர்ப்பன் நக்காங்கு அசதி நனி ஆடி,-தக்க பொரு கயற்கண்ணினாய்!-புல்லான் விடினே, இரு கையும் நில்லா, வளை. | |
|
உரை
|
|
|
|
|
[இதன் துறைக் குறிப்பு மறைந்து போயிற்று.] | |
56. | நுரை தரும் ஓதம் கடந்து, எமர் தந்த கருங் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின், புகர் இல்லேம் யாம் இருப்ப, பூங் கழிச் சேர்ப்பன் நுகர்வனன், உண்டான், நலம். | |
|
உரை
|
|
|
|
|
57. | கொடு வாய்ப் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணைத் தடவுக் கிளை பயிரும்-தண் கடல் சேர்ப்பன் நிலவுக் கொடுங் கழி நீந்தி, நம் முன்றில் புலவுத் திரை பொருத போழ்து. | |
|
உரை
|
|
|
|
|
காமம் மிக்க கழிபடர் கிளவி | |
58. | சுறா எறி குப்பை சுழலும் கழியுள், இறா எறி ஓதம் அலற இரைக்கும் உறாஅ நீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின், பொறாஅ, என் முன்கை வளை. | |
|
உரை
|
|
|
|
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி படைத்து மொழிந்தது | |
59. | தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை- மாழை மான் நோக்கின் மடமொழி!-'நூழை நுழையும் மட மகன் யார்கொல்?’ என்று, அன்னை புழையும் அடைத்தாள், கதவு. | |
|
உரை
|
|
|
|
|
தோழி தலைவிக்குத் தலைவன் வரைவொடு புகுந்தமை சொல்லியது; வினை முற்றி மீண்ட தலைமகன் வரவு அறியச் சொல்லியதூஉம் ஆம். | |
60. | பொன் அம் பசலையும் தீர்ந்தது ;- பூங்கொடி!- தென்னவன் கொற்கைக் குருகு இரிய, மன்னரை ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ, கூடல் அணைய வரவு. | |
|
உரை
|
|
|
|