|
ஐயை - தலைவி, செய்யவள் - திருமகள், வெய்ய வாள் தடக்கைப் பாய்கலைப் பாவை -
கொடிய வாளினைப் பெரிய கையின்கண் தாங்கிய தாவும் கலையை ஊர்தியாகவுடைய பெண்,
பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை - ஆராயும் கலைகளை உணர்ந்த பாவை,
பசிய வீரவளையை அணிந்தவள், அரிய அணிகலங்களை அணிந்த பாவைபோல்வாள் ;
ஐயை என்பதற்கு வென்றி மகள் எனவும்,
அருங்கலப் பாவை என்பதற்கு இரத்தினப் பாவை எனவும் கூறுவாரு முளர்.
|