| 
			
			| 
 
 
   
    | 
 
 10
 
 
 | ஆசான் பெருங்கணி அறக்களத்து 
      அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு
 
 கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும்
 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக்
 |  
 
 
   
    |  |   
    | ஆசான் 
      பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு - குரவன் கணிவன் 
      அறங்கூறு அவையத்தார் காவிதி மந்திரவோலை எழுதுவார் என்னும் இவரோடு, 
 கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் 
      - அரண் மனையிலுள்ளாரும் வளை யணிந்த பணிப்பெண்டிரும், ஒவியச் சுற்றத்து உரை அவிந்து 
      இருப்ப - சித்திரத்தொகுதி போன்று உரையாட்டு அடங்கியிருந்த வளவிலே ;
 
 ஆசான் - புரோகிதன். பெருங்கணி - 
      தலைமை நிமித்திகன். அறக்களத்தந்தணர் - தன்மாசனத்துக் கருத்தாக்கள் என்ப. பின்னர்,1 
      "அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி" எனக் கூறுதலும் நோக்கத்தக்கது. காவிதி - வரியிலார் 
      ; அரசிறை வாங்குவோர் ; காவிதி என்பது அரசனாற் கொடுக்கப்படும் ஓர் சிறப்புப் பெயராகலின் 
      அதனைப் பெற்றோரென்க. மந்திரக் கணக்கர் - அமைச்சர் குழுவி னுள் முடியும் முடிபுகளை ஓலையில் 
      எழுதுவார்.
 
 
 |   
    | 1 
      சிலப். 28: 222.
 
 |  
 |  |