பக்கம் எண் :


12. அழற்படு காதை





15
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்

தீமுகங் கண்டு தாமிடை கொள்ள


12
உரை
15

       காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் - மன்னனது அரண்மனையின் வெற்றியினையுடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள - எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க ;

       
காழ் - குத்துக்கோல். வாதுவர் - வாசிவாரியர். பகை மன்னர் பணிந்து திறை கொணர்ந்து காத்திருக்கும் வாயிலாகலின், 'கொற்ற வாயில்' என்றார். நெருப்பவித்தற்கு வந்து மிடைந்தன ரென்க ; தாம் விடைகொள்ள எனப் பாடங்கொண்டு அரசனை உட்கொண்டு இவர்கள் நீங்க எனவும் உரைப்ப.