| கனகமாலையார் இலம்பகம் |
1003 |
|
|
|
உற்ற எல்லாம் - (இவ்வாறு) தான் வருந்திப் பெற்றவற்றையெல்லாம்; தம்பியை உணரக் கூறி - தம்பிக்கு விளங்கக் கூறி; குரவரைச் சிந்தித்தாற்கு - இருமுது குரவரை நினைந்து வருந்தியவற்காக; வான் இழிந்தாங்குக் கண்ணீர் மர்பகம் நனைப்ப - முகிலினின்றும் பெய்தாற்போல நந்தட்டனுக்குக் கண்ணீர் பெருகி மார்பிடத்தை நனைப்ப; ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் கையால் ஒற்றி இதனைச் சொன்னான் - ஊனைச் சொரிந்து விளங்கும் வேலானாகிய சீவகன் தன் கையால் அவன் கண்ணீரை மாற்றி இதனைக் கூறினான்.
|
|
(வி - ம்.) இனி, கூறி என்பதைக் கூற, எனக்கொண்டு; சீவகன் கூற இதனைக் குரவருங் கேட்கப் பெற்றிலமேயென்று சிந்தித்த நந்தட்டனுக்குக் கண்ணீர் மார்பிடத்தை நனைப்ப என்றுமாம்.
|
( 203 ) |
| 1760 |
திண்பொரு ளெய்த லாகுந் | |
| |
தெவ்வரைச் செகுக்க லாகு | |
| |
நண்பொடு பெண்டிர் மக்கள் | |
| |
யாவையு நண்ண லாகு | |
| |
மொண்பொரு ளாவ தையா | |
| |
வுடன்பிறப் பாக்க லாகா | |
| |
வெம்பியை யீங்குப் பெற்றே | |
| |
னென்னெனக் கரிய தென்றான். | |
|
|
(இ - ள்.) ஐயா! - ஐயனே!; திண்பொருள் எய்தலாகும் - அசைவிலாத செல்வத்தைப் பெறற்காகும்; தெவ்வரைச் செகுக்கலாகும் - பகைவரை வெல்லுதற்கியலும்; நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும் - நட்பையும் பெண்டிரையும் மக்களையும் பிறபொருள்கள் எல்லாவற்றையும் அடையமுடியும்; ஆக்கலாகா ஒண்பொருளாவது உடன்பிறப்பு - ஆக்கிக்கொள்ள முடியாத சிறந்த பொருளாவது உடன் பிறப்பு ஒன்றே; எம்பியை ஈங்குப் பெற்றேன் - அத்தகைய தம்பியாகிய நின்னை இவ்விடத்தே பெற்றேன்; என் எனக்கு அரியது என்றான் - இனி எனக்கு அரியது இல்லை என்றான்.
|
|
(வி - ம்.) எம்பி : முன்னிலைப் படர்க்கை.
|
|
திண்பொருள் - அறத்தாறு நின்று ஈட்டலான் நிலைத்திருக்கும் தன்மையுடைய பொருள். தெவ்வர் - பகைவர். செகுத்தல் - அழித்தல். யாவையும் என்றது பிற பொருள் பலவற்றையும் என்பதுபட நின்றது. எம்பி - என் தம்பி, அரியதென் என்னும் வினா அரியதொன்றுமில்லை என்பதனை வற்புறுத்து நின்றது. ”நின்னைப் பெற்றேன்” என முன்னிலையாகக் கூற வேண்டிய விடத்து எம்பியை எனப் படர்க்கையாகக் கூறினர். இஃது இடவழுவமைதி.
|
( 204 ) |