| கனகமாலையார் இலம்பகம் |
1004 |
|
|
வேறு
|
| 1761 |
தேனிற் பாலெனச் செல்வன் றம்பியோ | |
| |
டானி யம்பல கழிய வாயிடை | |
| |
வேனிற் குன்றெனத் தோழர் வெந்துமெய் | |
| |
யூனி னைகின்றார் செய்வ துன்னினார். | |
|
|
(இ - ள்.) தேனில் பால் என - தேனிடத்துப் பால்போல இனிமையாக; செல்வன் தம்பியோடு ஆனியம் பல கழிய - சீவகன் தம்பியுடன் பல பொழுதுகள் கழியாநிற்க; ஆயிடைத் தோழர் - அவ் விராசமா புரத்தே உள்ள தோழர்கள்; வேனில் குன்றென வெந்து - கோடையில் மாலைபோல மனங் கொதித்து; மெய் ஊன் நைகின்றார் செய்வது உன்னினார் - உடம்பில் ஊன் மெலிகின்றவர் மேல் செய்யவேண்டுவதென்னென நினைத்தனர்.
|
|
(வி - ம்.) ஊனின் : இன் : அசை.
|
|
தேனிற் பால் என்றது தேனும் பாலும் கலந்தாற் போன்று என்றவாறு. ஒன்றன் இனிமைக்கு மற்றொன்று ஆக்கமாதல் பற்றி இங்ஙனம் உவமை கூறினர். ஆனியம் - நாள். வேனிற்குன்று - கோடைக் காலத்து மலை. தோழர் - பதுமுகன் முதலியோர்.
|
( 205 ) |
| 1762 |
நாடு மின்னினி நாங்கள் செய்வதென் | |
| |
றீடி னாலிருந் தெண்ணி நால்வரு | |
| |
மாடு மஞ்ஞையஞ் சாயற் றத்தைமெய் | |
| |
வாட லொன்றிலள் வஞ்சமாங் கொலோ | |
|
|
(இ - ள்.) நால்வரும் ஈடினால் இருந்து - தோழன்மார்நால் வரும் வருத்தத்தோடேயிருந்து; நாங்கள் செய்வது நாடுமின் இனி என்று எண்ணி - இனி நாம் செய்யுங் காரியத்தை ஆராய்மின் என்று சிந்தித்து; ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய் வாடுகின்றிலள் - ஆடும் மயில் போன்ற அழகிய தோற்றத்தையுடைய தத்தை உடல் மெலிகின்றிலள்; வஞ்சம் ஆம்கொல்? - (ஆதலின்) அவன் மறைந்துறைகின்றனனோ?
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம் : நால்வர் : பதுமுகன், புத்திசேனன், சீதத்தன், தேவதத்தன், கொல். ஐயம். நாங்கள் : கள் : பகுதிப் பொருள் விகுதி.
|
( 206 ) |
| 1763 |
கள்ள முண்டெனிற் காண்டு நாமென | |
மௌ்ள வெய்தினார் வினவக் கூறினாள் | |
வள்ளற் குற்றதும் மறைந்த வண்ணமும் | |
வெள்ளி வெண்மலை வேந்தன் பாவையே. | |
ஊழ்வினை துரப்ப வோடி | |
யொன்றுமூழ்த் தத்தி னுள்ளே | |
சூழ்குலைப் பெண்ணை நெற்றித் | |
தொடுத்ததீங் கனிக ளூழ்த்து | |
வீழ்வன போல வீழ்ந்து | |
வெருவரத் தக்க துன்பத் | |
தாழ்துய ருழப்ப வூணு | |
மருநவை நஞ்சு கண்டாய். | |
|