| கனகமாலையார் இலம்பகம் |
1005 |
|
|
|
(இ - ள்.) கள்ளம் உண்டு எனின் நாம் காண்டும் என - கரந்துறைதல் உண்டாயின் நாம் அறிவோம் என்று துணிந்து; மெல்ல எய்தினார் - மெல்லத் தத்தையிடம்போய்; வினவ - அவர்கள் கேட்ப; வெள்ளி வெண்மலை வேந்தன் பாவை - வெள்ளிமலை மன்னனுடைய மகள்; வள்ளற்கு உற்றதும் மறைந்த வண்ணமும் கூறினாள் - சீவகனுக்கு நேர்ந்ததையும், அவன் மறைந்திருக்கும் இடத்தையும் இயம்பினாள்.
|
|
(வி - ம்.) மௌ்ள - மெல்ல, எய்தினார் : முற்றெச்சம். வேந்தன் பாவை - கலுழவேகன் மகளாகிய காந்தருவதத்தை. வள்ளற்கு - சீவகனுக்கு. வண்ணம் - தன்மை.
|
( 207 ) |
| 1764 |
மற்ற வள்சொலக் கேட்ட மைந்தர்க | |
| |
ளிற்ற தம்முயி ரியல்பிற் போ்த்தவட் | |
| |
பெற்ற மாந்தரிற் பெரிது மெய்குளிர்ந் | |
| |
தற்ற மன்மையி னவல நீங்கினார். | |
|
|
(இ - ள்.) அவள் சொலக் கேட்ட மைந்தர்கள் - அவள் கூறக்கேட்ட தோழர்கள்; இற்ற தம் உயிர் இயல்பின் பேர்த்து - இழந்த தம் உயிரை முறைப்படி மீட்டு; அவண் பெற்ற மாந்தரின் - அங்கே அடைந்த மக்களைப்போல; பெரிதும் மெய் குளிர்ந்து - மிகவும் உடல் குளிர்ந்து; அற்றம் அன்மையின் அவலம் நீங்கினார் - அக் கூற்றுப் பொய் அல்லாமையின் வருத்தம் நீங்கினார்.
|
|
(வி - ம்.) அவள் : காந்தருவதத்தை. மைந்தர்கள் - பதுமுகன் முதலாயினோர், பேர்த்து - மீட்டு. மாந்தரின் - மனிதரைப்போல. அற்றம் - பொய்.
|
( 208 ) |
| 1765 |
திருவின் சாயறன் சீற டிச்சிலம் | |
| |
புருவக் குஞ்சிவா யுறுத்தி யொய்யென | |
| |
வுருகு முள்ளத்தி னுடம்பு வீங்கினார் | |
| |
பருகு காதலிற் பாடி யாடினார். | |
|
|
(இ - ள்.) திருவின் சாயல்தன் சீறடிச் சிலம்பு - திருமகளின் சாயலை உடைய தத்தையின் சிற்றடிச் சிலம்பை (நோக்கி); உருவக் குஞ்சிவாய் உறுத்தி - அழகிய சிகையிலே சேர்ந்தாற் போல வணங்கி; உருகும் உள்ளத்தின் ஒய்என உடம்பு வீங்கினார் - அன்பால் உருகும் உள்ளத்தால் மெய் பருத்தார்; பருகு காதலின்பாடி ஆடினார் - பருகலாம் போன்ற காதலாற் பாடி ஆடினார்.
|
|
(வி - ம்.) திருவின் : இன் : பொரு. சிலம்பு : ஆகுபெயர்; அடியை நோக்கி வணங்கி என்று கொள்க.
|
( 209 ) |