| கனகமாலையார் இலம்பகம் |
1007 |
|
|
|
(இ - ள்.) ஆங்கு உருக்கு ஆர் அரக்கு இட்டு - அவ்வேட்டின்மேல் உருக்கி அரக்கையிட்டு; அதன் மீமிசை பூங்குழையால் பொறி ஒற்றுபு - அதன்மேல் அழகிய தன் குழையாலே பொறி வைத்து; தேன் குழலாள் திசை செல்கெனத் தொழுதாள் நீட்ட - தேன் பொருந்திய கூந்தலாள் அவனிருக்குந் திசை நோக்கிச் செல்க என்று தொழுதவளாய் அவர்களிடம் கொடுக்க : அங்குப் பாங்கர் அன்றே படர்குற்றனர் - அத் திசை நோக்கித் தோழரும் அப்போதே செல்லலுற்றனர்.
|
|
(வி - ம்.) குரவரை நோக்கச் சில பிள்ளைகள் நிற்கவேண்டுமென்று நபுல விபுலர் நின்றனர்; மற்றையோர் புறப்பட்டனர்.
|
( 212 ) |
| 1769 |
வேந்திரி யக்கணை வித்திய வெஞ்சிலைக் | |
| |
காய்ந்திரிக் கும்புரு வக்கருங் கண்ணிய | |
| |
ராய்ந்தரிக் குந்நற வம்மலர் மாலையை | |
| |
வேய்ந்தரிக் கும்மிஞி றார்ப்ப விடுத்தாள். | |
|
|
(இ - ள்.) வேந்து இரிய வித்திய - அரசர்கள் ஓடுமாறு தொடுத்தற்கு; காய்ந்து வெஞ்சிலை கணை இரிக்கும் புருவக் கருங்கண்ணியர் - காய்ந்து கொடிய வில்லிற்றங்குங் கணையக் கெடுக்கும் புருவத்துள் தங்கும் கண்ணியராலே; ஆய்ந்து அரிக்கும் நறவம் மலர்மாலையை - ஆராய்ந்து தீமணங் களைந்து தொடுக்கும் தேன் மலர்ந்த மாலையை; வேய்ந்து அரிக்கும் மிஞிறு ஆர்ப்பவிடுத்தாள் - சூழ்ந்து மேயும் வண்டுகள் ஆர்ப்ப விடுத்தாள்.
|
|
(வி - ம்.) தத்தை தன் தலையை அசைத்துப் போம் என்றலின் மிஞிறு ஆர்த்தது என்க.
|
( 213 ) |
வேறு
|
| 1770 |
அலங்கு வெண்மதி யைப்பசி யடையவப் பகலே | |
| |
நிலங்கொண் டோங்கின நிரம்பின புகர்சுழி யுடைய | |
| |
வுலம்பி முன்னிரு தாள்களு முமிழ்வன போல்வ | |
| |
விலங்கு பாய்வன விடுகணை விலக்குவ கலிமா. | |
|
|
(இ - ள்.) அலங்கு வெண்மதி ஐப்பசி அடைய அப்பகலே - விளங்கும் வெண்திங்கள் அசுவதி நாளினைச் சேர அற்றை நாளிலே; நிலம் கொண்டு ஓங்கின - நிலத்திலே பிறந்து வளர்ந்தன; நிரம்பின புகர் சுழி உடைய - நிறைந்த புள்ளிகளையும் சுழிகளையும் உடையன; உலம்பிமுன் இருதாள்களும் உமிழ்வன போல்வ - முழங்கி முன்தாள்கள் இரண்டையும் கால்வனபோல்வன; விலங்கு பாய்வன - குறுக்கிட்டுப் பாய்வன; விடுகணை
|