பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1010 

1775 நாளும் புள்ளு நயத்தகு நன்னிலைக்
கோளு மோரையுங் கொண்ட நிமித்தமு
மாளு மாந்தரி னாய்ந்துகொண் டாயிடைத்
தாளி னூக்குபு சாத்தொ டெழுந்தவே.

   (இ - ள்.) நயத்தகும் நல்நிலை நாளும் - விரும்பத்தகும் நன்னிலையிலுள்ள நாளையும்; புள்ளும் - பறவைச் சகுனத்தையும்; கோளும் - கிரகத்தையும்; ஓரையும் - முழுத்தத்தையும்; கொண்ட நிமித்தமும் - கொண்ட பிற நிமித்தங்களையும்; ஆளும் மாந்தரின் ஆய்ந்துகொண்டு - கொள்ளும் மக்களைப்போல ஆராய்ந்து கொள்ள; ஆயிடைத் தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்த - ஆங்கே காலாலே செல்ல முயன்று, அவ்விடத்துப் போகின்ற வணிகர் திரளுடன் போயின.

   (வி - ம்.) புறப்பட்டு நின்று நாட்கேட்டனர் போக்கின் விரைவால்.

   புள் - பறவையான் அறியும் நிமித்தம். ஆளும் மாந்தரின் - இவற்றை மேற்கொள்ளும் நிமித்திகர் போன்று. சாத்து - வணிகர் கூட்டம் : உயர் திணைவிரவி மிகுதிபற்றி அஃறிணை முடிபேற்றது.

( 219 )
1776 பறையுஞ் சங்கும் பரந்தொலித் தார்த்தெழ
வுறைகொள் வாளினோ டொண்சுடர் வேன்மினச்
சிறைய ழிந்ததொர் செம்புனல் போன்றவ
ணறைக டற்படை யார்ப்பொ டெழுந்தவே.

   (இ - ள்.) பறையும் சங்கும் பரந்து ஒலித்து ஆர்த்து எழ - பறை பரவி ஒலிக்கவும் சங்குகள் ஆர்த்து முழங்கவும்; உறை கொள் வாளினோடு ஒண்டசுடர் வேல்மின - உறையிலே கொண்ட வாளுடன் ஒளிபொருந்திய வேலும் மின்ன; சிறை அழிந்தது ஒர் செம்புனல் போன்று - கரை உடைத் தெழும் புதுவெள்ளம் போல; அவண் அறை கடல் படை ஆர்ப்பொடு எழுந்த - அங்கே ஒலிக்குங் கடலனைய படை ஆரவாரித்துப் புறப்பட்டன.

   (வி - ம்.) பறை பரந்து ஒலித்து எழ சங்கு ஆர்த்து எழ என இயைக்க. மின்ன - மின என இடை குறைந்து நின்றது. செம்புனல் - புதுநீர். அறைகடல் : வினைத்தொகை.

( 220 )
1777 காய்த்த செந்நெலின் றாழ்கதிர் நெற்றிமேற்
பூத்த முல்லையின் போது பொழிந்துக
நீத்த நீர்வய லன்னமு நாரையு
மேத்தல் சான்முரு டார்ப்ப விரிந்தவே.

   (இ - ள்.) ஏத்தல் சால்முருடு ஆர்ப்ப - புகழ்பெற்ற முருடுகள் ஒலிப்பதனாலே; நீத்தம் நீர் வயல் அன்னமும் நாரை