பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 102 

186 முந்துநாங் கூறிய மூரித் தானையக்
கந்துகொல் கடாக்களி யானை மன்னவன்
பைந்தொடிப் பாசிழைப் பரவை யேந்தல்கு
றந்தைமாட் டிசைத்தனன் றனது மாற்றமே.

   (இ - ள்.) நாம் முந்து கூறிய மூரித்தானை கந்துகொல் கடாக்களி யானை அம் மன்னவன் - நாம் முன்னர்க் கூறிய பெரும் படையையும் கட்டுத்தறியை முறிக்கும் மதயானையையும் உடைய அச்சச்சந்தன்; பைந்தொடிப் பாசிழைப் பாவை ஏந்து அல்குல் தந்தை மாட்டு - பைந்தொடியினையும் புதிய அணிகலன்களையும் பரவிய ஏந்திய அல்குலினையும் உடையாளின் தந்தையினிடம்; தனது மாற்றம் இசைத்தனன் - தான் விசயையை மணக்கவேண்டிய மொழியைக் கூறிவிடுத்தான்.

( 157 )
187 மருமகன் வலந்தது மங்கை ஆக்கமு
மருமதிச் சூழ்ச்சியி னமைச்ச ரெண்ணிய
கருமமுங் கண்டவர் கலத்தற் பான்மையிற்
பெருமகற் சோ்த்தினார் பிணைய னாளையே.

   (இ - ள்.) மருமகன் வலந்ததும் மங்கை ஆக்கமும் - மருமகன் கூறியதனையும் மகள் அவனிடம் அன்பை அமைத்துக் கொள்ளுதலையும்; அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய கருமமும் - கூர்ந்த அறிவினையும் சூழ்ச்சியையும் உடைய அமைச்சர்கள் ஆராய்ந்த கருமத்தையும்; கண்டவர் - கண்ட தந்தையும் தாயும் ; கலத்தற் பான்மையால் - மைத்துன முறைமையாலும்; பிணை அனாளை பெருமகன் சேர்த்தினார் - மான்பிணை போன்றவளைப் பெருமகனிடம் சேர்த்தனர்.

 

   (வி - ம்.) ஆக்கம் கிளவியாக்கம் என்புழிப் போல [அமைத்துக் கொள்ளுதல் என்னும் பொருளில்] நின்றது; அவள் முதிர்ச்சியும் ஆம் . கருமம் - விசயையின் தமையனாகிய கோவிந்தனுக்குச் சச்சந்தன் துணையாதல்.

 

   'பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' (தொல். களவு-14) என்பதனான் ஒப்பும் பெருந்திணைப் பாற்படும் கந்தருவமாமாறு பெரும்பொருளான் உணர்க. [பெரும்பொருள் என்பது நூலாக இருக்கலாம்.]

( 158 )

வேறு

 
188 பொனங்கொடி யமிர்த னாளும் பொன்னெடுங் குன்ற னானு
மனங்கனுக் கிலக்க மாகி யம்புகொண் டழுத்த விள்ளா
ரினந்தமக் கெங்கு மில்லா ரியைந்தன ரென்ப முக்கட்
சினந்திகழ் விடையி னானுஞ் செல்வியுஞ் சோ்ந்த தொத்தே.