| கனகமாலையார் இலம்பகம் |
1021 |
|
|
வேறு
|
| 1799 |
மாதவப் பெருமை வண்ண | |
| |
மாநகர் நம்பிக் குற்ற | |
| |
வேதத்தைக் கேட்ட லோடு | |
| |
மிருகணும் பிறழ்ந்து மாழ்கிக் | |
| |
காதற்றம் மகனுக் குற்ற | |
| |
நவையெனக் கலங்கி வீழ்ந்தா | |
| |
ராதலா னங்கை யாரே | |
| |
யருள்பெரி துடைய ரென்றார். | |
|
|
(இ - ள்.) மாநகர் நம்பிக்கு உற்ற - பெருநகரிலே நம்பிக்கு நேர்ந்த; ஏதத்தைக் கேட்டலோடும் - துன்பத்தைக் கேட்டவுடனே; இருகணும் பிறழ்ந்து மாழ்கி - இருகண்களும் மேலே செருகி அறிவிழந்து; காதல் தம் மகனுக்கு உற்ற நவையெனக் கலங்கி வீழ்ந்தார் - காதலையுடைய தம் மகனுக்கு நேர்ந்த துன்பமெனக் கலங்கி வீழ்ந்தனர்; ஆதலால் நங்கையாரே அருள் பெரிது உடையர் - ஆகையால், அடிகள் பெரிது அருளுடையராயிருந்தார்; மாதவப் பெருமை வண்ணம் (என்!) என்றார் - இங்ஙனம் அருளைப் பிறப்பித்த தவப் பெருமையின் வண்ணம் இருந்தபடி என்னே என்று வியந்தனர்.
|
|
(வி - ம்.) மாதவப் பெருமை வண்ணம் இருந்தபடி என்? என வருவித்துக் கூறுக. நம்பி : சீவகன். ஏதிலான் ஒருவன் துயரத்தைக் கேட்டமாத்திரையானே இவ்வாறு கலங்கி வீழ்தற்குக் காரணமான பேரருளை இவர்க்கு இவர் தவமே உண்டாக்கியதாதல் வேண்டும் என்று வியந்தவாறாம்.
|
( 243 ) |
| 1800 |
மாழ்குபு மயங்கி வீழ்ந்த | |
| |
மாபெருந் தேவி தன்னை | |
| |
யாழ்துய ரவித்தற் கொத்த | |
| |
வரும்பெறல் யோக நாடிக் | |
| |
காழ்பரிந் தரைத்த சாந்தின் | |
| |
களிதரு நீரிற் றேற்ற | |
| |
யாழ்புரை கிளவி யாற்றாண் | |
| |
மயங்கிவீழ்ந் தரற்று கின்றாள். | |
|
|
(இ - ள்.) மாழ்குபு மயங்கி வீழ்ந்த மாபெருந்தேவி தன்னை - (இங்ஙனம்) அறிவிழந்து மயங்கி வீழ்ந்த விசயையை; ஆழ்துயர் அவித்தற்கு ஒத்த - பெருந்துயரை நீக்குதற்குத் தக்க : அரும்பெறல் யோகம் நாடி - பெறுதற்கரிய மருந்தைத் தேடி;
|