| கனகமாலையார் இலம்பகம் |
1022 |
|
|
|
காழ்பரிந்து அரைத்த சாந்தின் களிதரு நீரில் தேற்ற - முத்து வடத்தை அறுத்து அம் முத்துக்களைச் சேர்த்து அரைத்த சந்தனக்குழம்புடன் தந்த பனிநீரினாலே தெளிவிக்கத் (தெளிந்து); யாழ்புரை கிளவி ஆற்றாள் - யாழிசையனைய சொல்லாள் ஆற்றாளாய்; மயங்கி வீழ்ந்து அரற்றுகின்றாள் - மயங்கி விழுந்து அழுகின்றாள்.
|
|
(வி - ம்.) கையாற்றின் நீங்கி நின்றாள்.
|
|
மாழ்குபு : செய்பு என்னும் வாய்பாட்டெச்சம். தேவி; விசயை; கோப்பெருந்தேவியை என்றவாறு . யோகம் - கூட்டுமருந்து. காழ் - முத்துவடம், சாந்தின்களி - சந்தனக் குழம்பு. யாழ்புரை கிளவி - வீணையின் இசை போன்ற சொல்லுடையவள்; விசயை.
|
( 244 ) |
வேறு
|
| 1801 |
கைம்மாண் கடற்படையுட் காவலனை யாண்டொழியப் | |
| |
பொய்ம்மா மயிலூர்ந்து போகிப் புறங்காட்டுள் | |
| |
விம்மாந்தி யான்வீழ வீழ்ந்தேன் றுணையாகி | |
| |
யெம்மானே தோன்றினா யென்னை யொளித்தியோ. | |
|
|
(இ - ள்.) எம்மானே! - என் பிள்ளாய்!; கைம்மாண் கடற்படையுள் காவலன் ஆண்டு ஒழிய - படை வகுப்பால் மாட்சிமைப்பட்ட கடலைப் போன்ற படையிலே அரசன் படுதலாலே; பொய்மா மயிலூர்ந்து போகி - பொய்யாகிய மயிற்பொறியில் ஊர்ந்து சென்று; புறங்காட்டுள் யான் விம்மாந்து வீழ - சுடுகாட்டிலே யான் வருத்தத்தாற் பொருமி வீழ; வீழ்ந்தேன் துணை ஆகித் தோன்றினாய் - அங்ஙனம் வீழ்ந்த எனக்குத் துணையாகத் தோன்றிய நீ; என்னை ஒளித்தியோ - என்னை ஒளிக்கின்றாயோ?
|
|
(வி - ம்.) காவலனை : ஐ : அசை. எம்மான் : எம்பெருமான் என்பதன் மரூஉ.
|
( 245 ) |
| 1802 |
கையா ரிலங்கெஃகிற் கந்துக்கடன் கொடுபோய் | |
| |
மொய்யா ருவகையனாய் முற்றிழைக்குத் தான்கொடுப்ப | |
| |
நையாள் வளர்த்த சுநந்தை நவையுற வென் | |
| |
னையாவென் னையாவென் னையா வகன்றனையே. | |
|
|
(இ - ள்.) கைஆர் இலங்கு எஃகின் கந்துக்கடன் - கையில் விளங்கும் வேலேந்திய கந்துக்கடன்; மொய்ஆர் உவகையனாய் கொடுபோய் முற்றிழைக்குக் கொடுப்ப - நிறைந்த களிப்புடையவனாய்க் கொண்டு சென்று தன் மனைவியிடம் கொடுப்ப; நையாள் வளர்த்த சுநந்தை நவைஉற - வருந்தாமல் வளர்த்த சுநந்தை
|