பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1023 

துன்பமுறும்படி; என் ஐயா! என் ஐயா! என் ஐயா! - என் ஐயனே! என் ஐயனே! என் ஐயனே!; அகன்றனையே! - நீங்கிவிட்டனையே.

   (வி - ம்.) விரைபொருளின் வந்த சொல்லடுக்காதலின் மூன்றாயின. 'என் ஐயா' என்பது விளியன்று; இரக்கக்குறிப்பு. நின்னை வளர்த்தற்குரிய நல்வினையுடையவளும் வருந்த அகன்றாயே என்றாள்.

( 246 )
1803 மின்னிரைத்த பைம்பூண் விளங்கிலை வேல்வேந்தன்
முன்னுரைத்த மூன்று கனவும் புணையாக
வென்னுயிரைத் தாங்கி யிருந்தேன் வலியாகா
தென்னரசே யென்பூசல் கேளா திறந்தனையே.

   (இ - ள்.) என் அரசே! - என் இறையே!; மின் நிரைத்த பைம்பூண் விளங்கு இலை வேல்வேந்தன் - ஒளி நிரைத்த புதிய பூணையுடைய, விளக்கமான இலைவடிவமாகிய வேலேந்திய அரசன்; முன் உரைத்த மூன்று கனவும் புணை ஆக - முன்னர்ப் பயன் கூறிய (யான் கண்ட) மூன்று கனவும் தெப்பமாக; என் உயிரைத் தாங்கியிருந்தேன் - என் உயிரைச் சுமந்திருந்தேனுக்கு; வலி ஆகாது - ஆற்றலாகாமல்; என் பூசல் கேளாது - என் வருத்தத்தையும் கேட்கமுடியாமல்; இறந்தனையே - இறந்துவிட்டாயே.

   (வி - ம்.) பைம்பூணையுடைய வேந்தன், வேல் வேந்தன் எனக் கூட்டுக. மூன்று கனவுகளில் சச்சந்தன் இறத்தலாகிய ஒரு கனவு பலித்து விட்டதனால் மற்றையவும் பலிக்குமென்றிருந்தாள். 'அரசன்' 'நீ உயிர் கொண்டிருந்து நின் புதல்வனாற் பகையை வெல்க' என்று போக விடுதலின், என்பூசல் என்றாள்.

( 247 )
1804 கோவமா வாகிக் குடியோம்பி நின்குடைக்கீழ்ப்
பாவமே செய்தேன் பரிவெலா நீங்கினாற்
போவம்மா வென்றுரைப்பப் போவேன்முன் போயினா
யாவம்மா வம்மாவென் னம்மா வகன்றனையே.

   (இ - ள்.) கோ அ மா ஆகி நின் குடைக்கீழ் குடியோம்பி - உலகைக் காத்தலின் அரசனுமாய்ச் செல்வத்தை நல்கலின் அழகிய திருவுமாய் நின்று நின் குடையின்கீழ் இவ்வுலகெலாம் நீ ஓம்ப; பாவமே செய்தேன் பரிவு எலாம் நீங்கினால் - பாவமே புரிந்த நான் (அதனைக் கண்டு) யான் உற்ற துன்பம் எலாம் நீங்கினால்; போ அம்மா என்று உரைப்பப் போவேன் - (பிறகு) நீ துறந்துபோ அம்மா என்று நீ கூற நான் போவேன்; முன் போயினாய் - (அதற்கு முன்) நீ போயின; ஆ அம்மா! அம்மா! என் அம்மா! அகன்றனையே - அங்ஙனம் போய் நீ ஆ! ஐயோ! ஐயோ! ஐயோ! இனி அகன்றே விட்டாயோ? இதற்குக் காரணம் என்ன?