| கனகமாலையார் இலம்பகம் |
1024 |
|
|
|
(வி - ம்.) ஆ : இரக்கக் குறிப்பு. ஏ : வினா
|
|
ஓம்பி - ஓம்ப : எச்சத்திரிபு, அரசனுடனும் இறந்திலேன், இருந்தும் பகையையும் வென்றிலேன் என்று கருதிப் பாவமே செய்தேன் என்றாள். பரிவு - தான் நினைத்தவை முடியாத வருத்தம் . போ அம்மா : அம்மை அம்மா என விளியேற்றது; 'முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி - ஆவொடு வருதற் குரியவும் உளவே' (தொல். விளிமரபு. 9) என்றதனால். 'அம்ம' என அடுக்கிய திசைச்சொல்லாகிய விலாவணை 'கடிசொல் இல்லை' (தொல் எச்ச. 56) என்பதனாற் கொள்க. அன்றி, அம்ம, என்ற அகர ஈற்றிடைச் சொல், கேட்பித்து உரையசையாய விடத்து, 'உரைப் பொருட்கிளவி நீட்டமும் வரையார்' (தொல் உயிர் மயங்கு. 10) என்பதனால் நீண்டு - அது பின்பு. 'அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணாதாயினும் - விளியொடு கொள்ப தெளியுமோரே' (தொல். விளிமரபு. 36) என்பதனால், 'அம்மா கொற்றா என்ற வழிக். 'கொற்றா' என்பது எதிர்முகம் ஆக்கத் தான் கேளாய் என்னும் பொருள் தந்து, அதனோடு கூடி நின்றதாதலின் பிரிந்து நின்று விளியேலா தென்றுணர்க. இதனாற் பிள்ளாய் என விளித்தல் பொருந்தாது.
|
|
இதனால் அடுக்கி வந்த அம்மா என்னும் சொல் இரக்கக் குறிப்பைத் தரும் இடைச்சொல்லே அன்றி விளியாகாது என்பது நச்சினார்க்கினியர் கருத்தாயிற்று. மற்றும், 'அம்மா' என்பது மரபு வழுவமைதியாய்ப், 'பிள்ளாய்!' என விளித்தற் பொருளில் வந்ததென உரைகூறினாரும். முன்னர் உளர் என்று தெரிகிறது.
|
( 248 ) |
| 1805 |
கோமான் மகனே குருகுலத்தார் போரேறே | |
| |
யேமாங் கதத்தா ரிறைவாவென் னின்னுயிரே | |
| |
காமா கடலுட் கலங்கவிழ்த்தேன் கண்ணுணீர் | |
| |
பூமாண் புனைதாராய் நோக்காது போதியோ. | |
|
|
(இ - ள்.) கோமான் மகனே! - அரசன் மகனே!; குரு குலத்தார் போரேறே! - குருகுலத்திற் பிறந்த சிங்கமே!; ஏமாங்கதத்தார் இறைவா! - ஏமாங்கத நாட்டாரின் அரசே!; என் இன் உயிரே! - எனக்கு இனிய உயிரே! காமா! - காமனே!; பூமாண் புனைதாராய்! மலர்த்தார் மார்பனே!; கடலுள் கலம் கவிழ்த்தேன் கண்ணுள் நீர் நோக்காது போதியோ? - கடலிலே கலத்தைக் கவிழ்த்த என் கண்ணிலிருந்து வடியும் நீரைப் பாராமலே போகின்றாயோ?
|
|
(வி - ம்.) குருகுலத்தார் பலருளராதலின், 'ஏமாங்கதத்தார் இறைவர்' என்றாள். உவப்பின் கண் புதல்வனைக் கூறுவதனை ஈண்டுக் கூறிக், 'காமா' என்றாள். கலங்கவிழ்த்தது - அரசன் பட்டது. கண்ணுள் நீர் நோக்காது என்றது யான் பகை வென்றால் யான் நின் தந்தையை நோக்கி அழுகின்ற நீரை நோக்காதே என்றவாறு.
|
|
கண்ணுள் நீ என்றும் பாடம்.
|
( 249 ) |