பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1027 

   (இ - ள்.) விசயை மயில்போல் வீழ்ந்து கிடந்தாளை - விசயை மயிலைப்போல விழுந்து கிடப்பவளை; தாம் தாழ்ந்து பல தட்பம் செய்ய - தாங்கள் தாழ்ந்து பல குளிர்ச்சிகளைச் செய்ய; ஏல் பெற்று - உணர்ச்சி பெற்று; போழ்ந்து அகன்ற கண்ணாள் புலம்பா எழுந்திருப்ப - அரசனுயிரைப் பிளந்து அகன்ற கண்ணினாள் புலம்பியவாறு எழுந்திருப்ப; தொழுது இறைஞ்சிச் சூழ்ந்து அவன் திறம் சொன்னார் - கைகுவித்து வணங்கிச் சூழ்ந்து சீவகன் பிழைத்தபடியைக் கூறினர்.

   (வி - ம்.) மயில்போல் வீழ்ந்துகிடந்த விசயை என்றவாறு. தட்பம் - குளிர்ச்சி, ஏல் - உணர்ச்சி, அரசன் இறத்தற்குக் காரணமாதல் பற்றி ”அரசனுயிரைப் போழ்ந்தகன்ற கண்ணாள்” என்றனர் நச்சினார்க்கினியர்.

( 254 )

வேறு

1811 கொலைக்களங் குறுகலுங் கொண்டொர் தெய்வத
நிலைக்கள மிதுவென நீக்க நீங்கினா
னிலக்கண மடப்பிடி யியைந்தொர் போதக
மலைக்கணத் திடைமகிழ்ந் தனைய மைந்தனே.

   (இ - ள்.) இலக்கணம் மடப்பிடி இயைந்து ஒர் போதகம் - இலக்கணத்தையுடைய மடப்பிடியுடன் பொருந்தி ஒரு களிறு; மலைக் கணத்திடை மகிழ்ந்த அனைய மைந்தன் - மலைத்திரளினிடையே மகிழ்ந்த சீவகன்; கொலைக்களங் குறுகலும் - தன்னை அரசன் கொல்வதற்குக் கொலைக்களத்தைக் குறுகின அளவிலே; ஒர் தெய்வதம் கொண்டு - ஒரு தெய்வம் தன் உணர்வாலே பார்த்து; இது நிலைக்களம் என - இஃது தக்க இடம் என்று; நீக்க நீங்கினான் - அத் துன்பத்தை நீக்க நீங்கினான்.

   (வி - ம்.) 'கொல்ல' என்று தேவதத்தன் முன்னர்க் கூறியதனைத் தொடர்ந்து, கொல்லக் கொலைக்களங் குறுகலும் தேவன் நீக்கினான், என்றனர். மலைக்கணம் : தோழர்க்குவமை.

( 255 )
1812 பூவுடைத் தெரியலான் போர்வை நீத்தினிக்
கோவுடைப் பெருமக னாதல் கொண்டனஞ்
சேவடி சோ்ந்தனந் தொழுது செனறென
மாவடு நோக்கியுண் மகிழ்ந்து கூறினாள்.

   (இ - ள்.) பூ உடைத் தெரியலான் போர்வை நீத்து - மலர் நிறைந்த மாலையானாகிய சீவகன் தன் வணிகனாகிய போர்வையை நீக்கிவிட்டு; இனிக் கோவுடைப் பெருமகன் ஆதல் கொண்டனம் - இனித் தான் அரசுடைய பெருமகன் ஆதலைக் கண்டு கொண்டோம்; தொழுது சென்று சேவடி சேர்ந்தனம் என -