| கனகமாலையார் இலம்பகம் |
1028 |
|
|
|
யாங்கள் நின்னைத் தொழுது செல்வதற்கு, நின் சிவந்த திருவடியை அடைந்தோம் என்று கூற; மாவடு நோக்கி உள் மகிழ்ந்து கூறினாள் - மாவடு போன்ற கண்ணாள் உள்ளம் மகிழ்ந்து ஒரு மொழி உரைத்தனள்.
|
|
(வி - ம்.) சென்று - செல்ல : எச்சத்திரிபு.
|
|
தெரியலான் - மாலை புனைந்தவன் : சீவகன். போர்வை - மறைப்பு, வணிகச்சாதி என்பது இவன் மன்னர் சாதியை இதுகாறும் மறைத்திருத்தமைப்பற்றி அதனைப் போர்வை என்றார். நோக்கி : விசயை.
|
( 256 ) |
வேறு
|
| 1813 |
தரணி காவலன் சச்சந்த னென்பவன் | |
| |
பரணி நாட்பிறந் தான்பகை யாவையு | |
| |
மரணி லானென்கட் டங்கிய வன்பினா | |
| |
லிரணி யன்பட்ட தெம்மிறை யெய்தினான். | |
|
|
(இ - ள்.) தரணி காவலன் சச்சந்தன் என்பவன் பரணிநாள் பிறந்தான் - உலகைக் காவாதவனாகிய சச்சந்தன் பரணி நாளிலே பிறந்தவன்; பகை யாவையும் அரண் இலான் - அந் நாளின் சிறப்பாற் பகையெல்லாவற்றிற்கும் ஒரு காவல் இல்லாதவன்; என்கண் தங்கிய அன்பினால் - (எனினும்) என்னிடங் கொண்ட காதலால்; எம் இறை இரணியன் பட்டது எய்தினான் - எம் இறைவனாகிய அவன் உலகையுங் காவாமல் இரணியன் பட்ட துன்பத்தைத் தானும் பட்டான்.
|
|
(வி - ம்.) 'இன்ன நாளிற் பிறந்த இன்னான்' என்னல் அரசர்க்கு மரபு. பரணி யானை பிறந்த நாளாதலின் யானைபோற் பகையை மதியான் என்றாள். 'பரணியிற் பிறந்தவன் தரணி ஆள்வான்' என்பது இக்காலப் பழமொழி. இறைவன் உற்றது - அமைச்சர் நிலமும் திருவும் நீங்கும் என்றது கொள்ளாதே, கட்டியங்காரனே எனக் குள்ளான் என்று பின் உதவியின்றி நின்ற நிலை. 'காவலன்' என்பது 'உண்ணலன்' என்பதுபோல ஈண்டு மறையை உணர்த்திற்று.
|
( 257 ) |
| 1814 |
விசயை யென்றுல கோடிய வீறிலேன் | |
| |
பசையி னாற்றுஞ்சி யான்பட்ட தீதெலா | |
| |
மிசைய நம்பிக் கெடுத்துரைத் தென்னுழை | |
| |
யசைவின் றையனைத் தம்மி னெனச்சொன்னாள். | |
|
|
(இ - ள்.) விசயை என்று உலகு ஓடிய வீறு இலேன் - விசயை என்று எங்கும் பரந்த நல்வினை இல்லாதேன் மேல் வைத்த; பசையினால் துஞ்சி - பற்றால் (அரசன்) துஞ்சுதலாலே, யான் பட்ட தீது எலாம் - யான் அடைந்த தீமைகளையெலாம்;
|