| கனகமாலையார் இலம்பகம் |
1029 |
|
|
| 1816 |
பகைவ ருள்ளமும் பாம்பின் படர்ச்சியும் | |
| |
வகைகொண் மேகலை மங்கையர் நெஞ்சமு | |
| |
மிகைசென் மேகத்து மின்னுஞ்செந் நில்லலா | |
| |
புகைசெய் வேலினீர் போற்றுபு சென்மினே. | |
|
|
(இ - ள்.) புகை செய் வேலினீர்! - வெம்மையாற் புகையும் வேலையுடையீர்!; பகைவர் உள்ளமும் - பகைவருடைய நெஞ்சமும்; பாம்பின் படர்ச்சியும் - பாம்பின் போக்கும்; வகை கொள் மேகலை மங்கையர் நெஞ்சமும் - வகையுற்ற மேகலை அணிந்த மங்கையரின் உள்ளமும்; மிகை செல் மேகத்து மின்னும் - வானிற் செல்லும் மேகத்திலுள்ள மின்னும்; செம் நில்லலா - செவ்வையாக நில்லா (ஆதலின்); போற்றுபு சென்மின் - பகைவர் உள்ளத்தையும் மகளிர் நெஞ்சையும் அறிந்து ஒழுகுமின்.
|
|
(வி - ம்.) படர்ச்சி - செலவு. மிகை - மேலே; வானிலே என்றவாறுதில்லலா - நில்லா. வேலினீர் : விளி.
|
( 260 ) |
|
நம்பிக்கு இசைய எடுத்து உரைத்து - நம்பிக்குப் பொருந்த முறையாகக் கூறி; ஐயனை அசைவு இன்று என் உழை தம்மின் - இதனால் ஐயன் வருந்தாதபடி அவனை என்னிடம் அழைத்து வம்மின்; எனச் சொன்னாள் - என்றுரைத்தாள்.
|
|
(வி - ம்.) விசயை என்றுலகெலாம் புகழ்பரவுதற்குக் காரணமான வீறு இலேன் என்க. வீறு - ஈண்டு நல்வினை. இனி ”அந்தோ விசயை பட்டன காண்மின்” என உலகெலாம் கூறுதலின் என்பெயர் உலகெலாம் பரத்தற்குக் காரணமாவேனும் வீறு இலேனும் ஆகிய யான் எனினுமாம். பசை - பற்று. என்னுழை - என்பால்.
|
( 258 ) |
| 1815 |
கோதை வேனம்பிக் கல்லதை யிப்பொருள் | |
| |
யாதுங் கூறன்மின் யாரையுந் தேறன்மி | |
| |
னேத மின்னன வின்னண மெய்தலாற் | |
| |
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின். | |
|
|
(இ - ள்.) கோதை வேல் நம்பிக்கு அல்லது - மாலையணிந்த வேலையுடைய நம்பிக்கன்றி; இப்பொருள் யாதும் கூறன்மின் - இப்பொருளிற் சிறிதும் பிறர்க்குரையன்மின்; யாரையும் தேறன்மின் - எவரையும் தெளியன்மின்; இன்னன ஏதம் இன்னணம் எய்தலால் - இத் தன்மையவாகிய பிழைகள் நினைவின்றியும் வருதலின்; பேதையாரொடும் பெண்ணொடும் பேசன்மின் - அறிவிலாரொடும் பெண்களுடனும் பேசாதீர்.
|
|
(வி - ம்.) 'இன்னன' என்றது, தான் பிறப்புணர்த்திய அதனை 'இன்னணம்' என்றது தன் நினைவின்றிப் புலம்பலிற் கூறிய அதனை.
|
( 259 ) |