| நாமகள் இலம்பகம் |
103 |
|
|
(இ - ள்.) பொன் நெடுங்குன்று அனானும் பொன்அம் கொடி அமிர்து அனாளும் - நெடிய பொற்குன்றம் போன்றவனும் அழகிய பொற்கொடியாகிய அமிர்து போன்றவளும்; அம்பு கொண்டு அழுத்த அனங்கனுக்கு இலக்கம்ஆகி - மணத்திற்கு முன்னர்க் காமன் அம்பினால் அழுத்துதற்கு உரிய இலக்கங்களாக இருந்து; முக்கண் சினம்திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்து - சீற்றம் விளங்கும் விடையினையுடைய முக்கட் பெருமானும் உமையம்மையும் சேர்ந்ததைப்போல; விள்ளார் - மணம் நிகழ்ந்த பின்னர் நீங்காதவராய்; தமக்கு இனம் எங்கும் இல்லார் - தங்கட்கு உவமை எங்கும் இல்லாதவராய்; இயைந்தனர் - ஓருடம்பாயினர்.
|
|
|
(வி - ம்.) 'கொடி' என்றார், குன்று மறையப் படர்ந்து கேடுபிறப்பித்தலின். அழுத்த இலக்கமாய். காட்சியும் நிலையும் முயக்கமும் கூறி, அவற்றிற்கு உவமை மேற் கூறுகின்றார்.
|
|
|
[அமிர்தனாளும் குன்றனானும் ' என்றது காட்சி : ' அனங்கனுக்கிலக்கமாகி ' என்றது நிலை ; இயைந்தனர் என்றது முயக்கம்.]
|
|
|
இலக்கம் - வில்வித்தை கற்கும் மாணவர் அம்பைச் குறிபார்த்துத் தைத்தற்பொருட்டு நடப்படுவதொரு நார்மரம். அவர்கள் மணம் நிகழ்வதற்கு முன்னர் மிகமிகக் காமவேகத்தாலே துன்புற்றனர் என்பது அனங்கனுக்கு அம்புகொண்டழுத்த இலக்கமாகி என்றதன் கருத்தென்க.
|
( 159 ) |
| 189 |
காதலாற் காம பூமிக் கதிரொளி யவரு மொத்தார் |
| |
மாதருங் களிற னானு மாசுண மகிழ்ச்சி மன்ற |
| |
லாதரம் பெருகுகின்ற வன்பினா லன்ன மொத்துந் |
| |
தீதிலார் திளைப்பி னாமான் செல்வமே பெரிது மொத்தார். |
|
|
(இ - ள்.) மாதரும் களிறு அனானும் மகிழ்ச்சி மன்றல் மாசுணம் (ஒத்தும்) - விசயையும் சச்சந்தனும் மகிழ்வையுடைய முயக்கத்தால் பாம்பு போன்றும்; ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும் - மேலும் மேலும் பெருகுகின்ற அன்பின் மென்மையால் அன்னத்தை ஒத்தும்; திளைப்பின் ஆமான் (ஒத்தும்) - கண் முதலிய உறுப்புக்களின் துய்ப்பினால் ஆமானை ஒத்தும்; தீதிலார் காமபூமிச் செல்வமே பெரிதும் ஒத்தார் - குற்ற மற்ற அவர்கள் இப் புணர்ச்சிக்கு முன்னர்ப் போகபூமியில் உள்ளாரின் செல்வத்தையே பெரும்பாலும் ஒத்திருந்தனர்; காதலால் கதிரொளியவரும் ஒத்தார் - இப்போது வேட்கையினாற் கதிரொளியவராகிய போகபூமியிலுள்ளாரின் தன்மையையும் ஒத்தனர்.
|
|
|
(வி - ம்.) காதல் - எல்லாப் பொருளையும் நுகர்தற்குச் செல்லும் வேட்கை . காமபூமி தானப்பயனாற்பெறும் போகபூமி. உம்மை [உயர்வு]
|
|