பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1034 

போக்கு அரியது - உள்ளே. புக்கவர்க்குப் புறப்பட்டுப் போதல் அரிதாயிருந்தது.

   (வி - ம்.) அப்பொழிலின் பெற்றி துளித்தலானும் உயிர்த்தலானும் ஆர்தலானும் தூர்தலானும் துதைதலானும் உள்புக்கவர் போக்கரிது என்க

( 267 )
1824 தாதணி கொழுநிழ லிருந்து தண்மதுப்
போதணி யலங்கறாழ் பொருவின் மார்பனை
யாதுநா மடைதிற முரைமி னீரெனக்
காதலாற் பதுமுகன் கண்டு கூறினான்.

   (இ - ள்.) தாது அணி கொழுநிழல் இருந்து - பூந்தாதை அணிந்த அக் கொழுவிய நிழலிலே அமர்ந்து; தண்மதுப் போது அணி அலங்கல் தாழ் பொரு இல் மார்பனை - தண்ணிய தேனையுடைய மலர்களால் ஆக்கப்பெற்ற மாலையணிந்த ஒப்பற்ற மார்பையுடைய சீவகனை; யாம் அடை திறம் யாது நீர் உரைமின் என - யாம் காணும் வகை யாது ? நீவிர் கூறுமின்! என்ற அளவிலே; பதுமுகன் கண்டு காதலாற் கூறினான் - பதுமுகன் ஆராய்ந்து அன்புடன் உரைத்தான்.

   (வி - ம்.) தாது - பூந்துகள் மதுப்போது தேனையுடைய மலர். மார்பனை : சீவகனை, நீர் உரைமின் என மாறுக. கண்டு ஆராய்ந்து தெளிந்தென்க.

( 268 )
1825 திருக்கிளர் மன்னவன் சேனை மாநகர்
பொருக்கொளி யினநிரை கோடுங் கொண்டபின்
முருக்கொளி மலரடி மூரி மொய்ம்பனைச்
செருக்களத் தெதிர்ப்படச் சிதைவ தில்லையே.

   (இ - ள்.) திருக்கிளர் மன்னவன் சேனை மாநகர் - செல்வம் விளங்கும் தடமித்த மன்னவனுடைய படை நிறைந்த பெரிய நகரில் உள்ள; ஒளி என நிரை பொருக்குக் கோடும் - ஒளி பொருந்திய ஆநிரையை ஒப்புக்குக் கொள்வோம்; கொண்ட பின் - (அவ்வாறு) கொண்டபிறகு; முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனை - முருக்கினது ஒளி பொருந்திய மலர் போலும் அடியையுடைய பெருவலியுடைய சீவகனை; செருக்களத்து எதிர்ப்படச் சிதைவது இல்லை - போர்க்களத்திலே எதிர்ப்படுவதற்குக் கெடுவதில்லை.

   (வி - ம்.) பொருக்கு - பொருவுக்கு; நிலக்குப்போல் என்றது, துரியோதனன் விராடபுரத்தே நிரையடித்துத் தருமன் முதலாயினோருண்மை யுணர்ந்ததற்கு யாமும் இவன் உண்மையை உணர்கின்ற தன்மை ஒக்கும்படி என்றவாறு. இனி, பொருவுக்கு ஆனிரை கொள்