| கனகமாலையார் இலம்பகம் | 
1036  | 
 | 
  | 
|  1828 | 
மஞ்சுசூழ் விசும்பிடை மணந்துமின் மிளிர்வபோல் |   |  
|   | 
வஞ்சமின் மறவர்வாண் மிளிர்ந்துபாய் குருதியுட் |   |  
|   | 
குஞ்சரங் குளிப்பதோர் நீத்தமா மாதலா |   |  
|   | 
லெஞ்சலில் கொள்கையீ ரெண்ணிச்சூழ் மின்களே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மஞ்சு சூழ் விசும்பிடை மணந்து மின் மிளிர்வ போல் - முகில் தவழும் வானிலே கலந்து மின் ஒளிர்வனபோல; வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து - வஞ்சமின்றி முன்சென்று பொரும் வீரருடைய வாள் விளங்கி; பாய் குருதியுள் குஞ்சரம் குளிப்பது ஓர் நீத்தம் ஆம் - பாய்கின்ற செந்நீரிலே யானைகள் முழுகும்படியான ஒரு வெள்ளம் உண்டாகும்; ஆதலால் - ஆகையால்; எஞ்சல் இல் கொள்கையீர்! - ஒழியாத கொள்கையீர்!; எண்ணிச் செய்ம்மின்கள் - இனி, இதனையும் ஆராய்ந்து செய்யுங்கோள். 
 | 
| 
    (வி - ம்.) படைவீரர் பின்வாங்காமற் பொருதால் நேருவது இஃது என்று கூறினான். ”ஒழியாத கொள்கையீர்” என்பது எச் செய்தியையும் நன்காய்ந்து துணிந்து வெற்றியுடன் முடிக்கும் ஊறுதியுடையீர் என்பதாம். 
 | 
| 
    மஞ்சு - முகில், விசும்பு - வானம், அவர் நமக்குப் பகைவர் அல்லர் என்பான் வஞ்சம் இல் மறவர் என்றான். இவ்விரண்டும் செய்யுளும் புத்திசேனன் கூற்று. (இவற்றால்) நமக்குப் பழியும் பாவமும் உண்டு என்றான். 
 | 
( 272 ) | 
|  1829 | 
என்றனன் புத்திசே னென்னுநான் மறையினா |   |  
|   | 
னன்றதே பொருளென நால்வரு மிருந்துழி |   |  
|   | 
யொன்றிமுன் விடுத்தவர் மூவரொற் றாட்கள்வந் |   |  
|   | 
தின்றிதாற் பட்டதென் றியம்புகின் றார்களே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) என்றனன் புத்திசேன் என்னும் நான் மறையினான் - என்றுரைத்தான் புத்திசேனன் என்னும் அந்தணன்; அதே நன்று பொருள் என நால்வரும் இருந்துழி (என்ற பின்னும்) பதுமுகன் கூறிய அதுவே நல்ல பொருள் என்று நால்வரும் எண்ணியிருந்த போது; முன் ஒன்றி விடுத்தவர் மூவர் ஒற்றாட்கள் வந்து - முன்னரேயே தாம் பொருந்தி விட்டவராகிய ஒற்றர் மூவர் வந்து; இன்று இது பட்டது என்று இயம்புகின்றார்கள் - இன்று இது பிறந்த செய்தி என்று கூறுகின்றார்கள். 
 | 
| 
    (வி - ம்.) மூவர் வந்து கூறுகின்றார்கள் என்றாராயினும் மூவரும் ஒருவரையொருவர் அறியாமலே சென்று ஒற்றிவந்து தனித்தனியே கூறினார்கள் என்றும், அம் மூவர் கூற்றும் ஒன்றாக இருந்தன என்றும் கொள்க. 'ஒற்றொற் றுணராமை ஆள்க; உடன் மூவர் - சொற்றொக்க தேறப் படும்' (குறள். 589) என்பதூஉங் காண்க. 
 | 
( 273 ) |