கனகமாலையார் இலம்பகம் |
1037 |
|
|
1830 |
வளையசுந் தரமெனும் வாரண மால்வரை | |
|
முளையிளந் திங்கள்போன் முத்துடைக் கோட்டது | |
|
கிளையிளம் பிடிகளைஞ் ஞூற்றிடைக் கேழரக் | |
|
களையவஞ் சனவரை யனையதக் களிறரோ. | |
|
(இ - ள்.) வளைய சுந்தரம் எனும் வாரணம் மால்வரை - வளைய சுந்தரம் என்னும் பெயருடைய (தடமித்தனுடைய) பட்டத்து யானையாகிய பெரிய மலை; முளை இளந் திங்கள்போல் முத்து உடைக்கோட்டது - முளைத்த இளமதிபோல் முத்துக்கள் பொருந்திய கொம்பினையுடையது; அக்களிறு - அந்த யானை; கிளை இளம் பிடிகள் ஐஞ்ஞூற்றிடைக் கேழ் அரக்கு அளைய அஞ்சன வரை அனையது - உறவுடைய இளம் பிடிகள் ஐந்நூற்றின் இடையிலே ஒளியுடைய அரக்கு அளாவின கருமலை போன்றது.
|
(வி - ம்.) வளையசுந்தரம் என்பது தடமித்தன் பட்டத்தியானையின் பெயர். மால்வரையில் முளைத்த இளந் திங்கள்போல் கோடு, முத்துடைக் கோடு எனத் தனித்தனி கூட்டுக. ஐஞ்ஞூறு - ஐந்நூறு. கேழ் - நிறம். அளைய - அளாவிய. அஞ்சனவரை - கருமலை.
|
( 274 ) |
1831 |
கடுமதக் களிப்பினாற் காரென முழங்கலின் | |
|
விடுகலார் பாகரும் வெருவரக் கொன்றிடப் | |
|
பிடியொடுங் கந்தணை வின்றிநீ ருருள்பிளந் | |
|
தடுகளி றந்தப்போ திகைபரிந் தழன்றதே. | |
|
(இ - ள்.) கடுமதக் களிப்பினால் கார் என முழங்கலின் - கொடிய மத மயக்கினால் முகில்போலப் பிளிறுதலாலே; பாகரும் விடுகலார் - பாகரும் அதனை விடாதாராயிருந்தார்; வெருவரக் கொன்றிட - அச்சமுண்டாகக் கொன்றிடற்கு; பிடியொடும் கந்து அணைவு இன்றி - பிடியையும் கம்பத்தையும் அணையாமலே; நீருருள் பிளந்து - நீருருளைப் பிளந்து; அந்தப் போதிகைபரிந்து - பின்னங்காலிற் சங்கிலியை அறுத்து; அடுகளிறு அழன்றது - அவ்வடு களிறு சினந்தது.
|
(வி - ம்.) நீருருள்- சங்கடமாகப் பண்ணித் தண்ணீர் ஏற்றி உருட்டுவதொன்று. இனி, ஈருள் பிளந்து என்று ஓதின், உள்ளீரலைப் பிளந்து கொன்றிட வெனக் கூட்டுக. (ஈர்+உள் : உள்+ஈர்.)
|
( 275 ) |
1832 |
கண்ணுமிழ் தீயினாற் சுடநிறங் கரிந்தபோற் | |
|
பண்ணுமிழ் வண்டுலாய்ப் பரத்தரா நின்றசீ | |
|
ரண்ணலங் களிற்றினை யடக்கினான் சீவகன் | |
|
வண்ணமே கலையினார் மனமெனப் படிந்ததே. | |
|
(இ - ள்.) கண் உமிழ் தீயினால் சுடநிறம் கரிந்த போல் - கண்உமிழும் தீயினாற் சுடுதலின் நிறம் கருகினாற்போல; பண்
|