கனகமாலையார் இலம்பகம் |
1039 |
|
|
கையால் செய்தது - அவனிடத்தங்கிய பயிரால் தொழில்களைத் தன் துதிக்கையாலே செய்தது.
|
(வி - ம்.) அப்புது, ஆது, ஐ : இவை யானைப் பேச்சான குறிப்பு மொழிகள், பயிராவன; பரிபரி என்பன முதலியன. தொழில் - தோட்டி முதலியன எடுத்துக் கொடுத்தல்.
|
( 278 ) |
1835 |
கொட்டையம் புரோசைதா னிருவடங் கொண்டுடன் | |
|
கட்டினான் கருவலித் தடக்கையாற் றோட்டியு | |
|
மிட்டன னிரண்டுட னிமிழ்க்கொளீஇ யிலங்குபொற் | |
|
பட்டமும் பனிவரை மின்னெனக் கட்டினான். | |
|
(இ - ள்.) கருவலித் தடக்கையால் - கொடிய வலியையுடைய கையினால்; கொட்டையம் புரோசைதான் இருவடங்கொண்டு உடன் கட்டினான் - தலையில் மணிமுடியை உடைய புரோசைக் கயிற்றை இரண்டு வடங்கொண்டு சேரக் கட்டினான்; இரண்டு தோட்டியும் உடன் இமிழ்க் கொளீஇ இட்டனன் - நெடுந்தோட்டியையும் குறுந் தோட்டியையும் தம்மிற் பிணைத்து அதன் கழுத்திலே இட்டான்; பனிவரை மின் என இலங்குபொன் பட்டமும் கட்டினான் - இமயமலையிலே மின்போல விளங்கும் பொற்பட்டத்தையும் கயிற்றையுங் கோத்துக் கட்டினான்.
|
(வி - ம்.) கொட்டை - முடிமணி, முடிச்சுமாம், கருவலித்தடக்கையான் என்புழி கருமை கொடுமைப் பண்பின்மேற்று. இரண்டு தோட்டியும் என்க. அவை நெடுந்தோட்டி குறுந்தோட்டி என்பன.
|
( 279 ) |
1836 |
கச்சையும் வீக்கினன் கறங்கிரு மணியணிந் | |
|
தச்சுறு கொழுந்தொடர் யாப்பழித் தடியிணை | |
|
யுச்சியும் புரோசையுட் குளிப்பவுய்த் துறுவலி | |
|
மெச்சிமேல் வேந்தனும் விழைதகத் தோன்றினான். | |
|
(இ - ள்.) உறுவலி - மிகுவலியுடைய சீவகன்; கச்சையும் வீக்கினன் - கீழ் வயிற்றிற் கட்டும் கச்சையையுங் கட்டினான்; கறங்கு இரு மணி அணிந்து - ஒலிக்கும் இரு மணிகளை இரு பக்கமும் அணிந்து; அச்சுறு கொழுந் தொடர் யாப்பு அவிழ்த்து - யானையின் வேகத்தை அடக்கும் வளவிய தொடரையும் கட்டவிழ்த்து; அடி இணை உச்சியும் புரோசையுள் குளிப்ப உய்த்து - (தன்) அடியிரண்டின் உச்சியையும் (அதன்) புரோசைக் கயிற்றுக்குள்ளே அழுந்தச் செலுத்தி; மேல் வேந்தனும் மெச்சிவிழைதகத் தோன்றினான் - புலிமுகப்பில் இருக்கும் அரசனும் புகழ்ந்து விரும்பும்படி வந்து தோன்றினான்.
|
(வி - ம்.) அச்சுறு கொழுந்தொடர் - விரையாதபடி மரங்களிலே இரும்பைத்தைத்துக் கழுத்திலே மாலைபோலே இடுவதொன்று.
|
( 280 ) |