| கனகமாலையார் இலம்பகம் |
1042 |
|
|
|
வெள்ளநீர்ப் பெருஞ்சனம் வியந்து கைவிதிர்த்தது - வெள்ளம் போன்ற தன்மையுடைய மிகுதியையுடய மக்கள் திரள் வியப்புற்றுக் கைவிதிர்த்தது.
|
|
(வி - ம்.) ஓடுகின்ற விசையாலே ஒலி அடங்கின மணிகள் நின்ற பொழுது ஒலித்தன.
|
|
நுதி - முனை. வரிநுதல் - வரிகளையுடைய நெற்றி. ஓய்யென; விரைவுக் குறிப்பு. கிணின்; ஓசைக் குறிப்பு.
|
( 285 ) |
| 1842 |
என்மன நின்மன மென்றிரண் டில்லையாற் |
|
| |
றன்மனத் துளபொரு டான்றனக் குரைப்பதொத் |
|
| |
துன்மன மென்மன மென்பதொத் திழைத்ததா |
|
| |
னன்மனக் குஞ்சர நம்பியோ டென்மரும். |
|
| |
|
(இ - ள்.) தன் மனத்து உள பொருள் தான் தனக்கு உரைப்பது ஒத்து - தன் மனத்திற் பொருளைத் தான் தனக்கு உரைக்கும் தன்மையை ஒத்து ஏவல் செய்தலாலே; உன் மனம் என் மனம் என்பது - உன் மனமே என்மனம் என்று கூறுவதாகிய; நன்மனக் குஞ்சரம் நம்பியோடு ஒத்து இழைத்தது - நல்ல மனமுடைய குஞ்சரம் நம்பியின் மனமுடன் ஒன்றித் தொழிலைச் செய்தது; (ஆதலால் அக் குஞ்சரத்திற்கும் நம்பிக்கும்) என்மனம் நின்மனம் என்று இரண்டு இல்லை என்மரும் - என்மனம் நின்மனம் என இரண்டில்லையாக இருந்தது என்பாரும்.
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.
|
( 286 ) |
| 1843 |
தேவனே மகனலன் செல்வன்மற் றென்மரும் |
|
| |
பாவையே நோற்றனள் பாரின்மே லென்மருங் |
|
| |
கோவனும் மக்களுங் குளிர்ந்துதோ ணோக்கினா |
|
| |
ரோவென வையகத் தோசைபோ யுயர்ந்ததே. |
|
| |
|
(இ - ள்.) செல்வன் தேவனே, மகன் அலன் என்மரும் - இச் செல்வன் தேவனே, மகன் அல்லன் என்பாரும் : பாரின் மேல் பாவையே நோற்றனள் என்மரும் - உலகில் கனகமாலையே (இவனை அடைய) தவம்புரிந்தனள் என்பாரும் (ஆகி) : ஓ என ஓசை போய் வையகத்து உயர்ந்தது - ஓ என்ற ஓசை சென்று உலகில் மேம்பட்டது. (அதனால்) கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார் - அரசனும் அவன் மக்களும் மகிழ்ந்து தம் தோளை நோக்கினார்கள்.
|
|
(வி - ம்.) என்பார் என்பர் எனத் திரிந்தது. உண்மரும் தின்மரும் (பதிற் -24) என்றாற்போல; இனி, ஆயினார் என வினை கோடலின்; மாரீறு விகாரமாய் நின்ற தெனின், தனக்குரிய எதிர்காலம் உணர்த்தாமை உணர்க.
|
( 287 ) |