கனகமாலையார் இலம்பகம் |
1046 |
|
|
(இ - ள்.) விடு பொறி அரவு என விளங்கு வெஞ்சிலை அடுகணை சிதறினார் - வீசுகின்ற தீப்பொறியையுடைய பாம்பைப் போல விளங்கும் கொடிய வில்லாலே அம்புகளை (ஆனிரை கொள்ள வந்தோர்) வீசினார்; வால்வளை ஆர்த்த-வெண் சங்குகள் முழங்கின; கால் இயல் இவுளி கடுகின - காற்றைப்போல இயங்கும் குதிரைகள் விரைந்தான; காண்டலும் - இவற்றைக் கண்டதும்; கோவலர் முந்து முடுகுபு காற்பெய்தார் - கோவலர் முற்பட ஆனிரையைக் காத்தற்கு முற்பட ஓடினார்.
|
(வி - ம்.) விடுபொறி : வினைத்தொகை. பொறி - தீப்பொறி, அடுகணை : வினைத்தொகை. காலியல் - காற்றைப்போல, முடுகுபு - முடுகி, காற்பெய்தார் - ஓடினார்.
|
( 294 ) |
|
(இ - ள்.) அளை செறி இரும்புலி அனைய ஆடவர் - குகையிலே தங்கிய பெரும்புலி போன்ற ஆடவர்கள்; மணிநிரை வளைத்தனர் - மணியையுடைய நிரையை வளைத்துக்கொண்டனர்; வன்கண் ஆயரும் வெருவரத்தக்க வெஞ்சொலால் விளைத்தனர் - கொடிய ஆயரும் அஞ்சத்தக்க கொடிய சொற்களால் வீரமொழி விளைத்தனராய்; பூசல் உளைத்தனர் - போரை வருந்திச் செய்தனர்; விட்டு உணர்த்த ஓடினார் - பிறகு போரைவிட்டுத் தெரிவிக்க அரசனிடம் ஓடினர்.
|
(வி - ம்.) அளை - குகை, இரும்புலி - பெரிய புலி, ஆடவர் ஈண்டு வீரர் என்பதுபட நின்றது. வெருவரத்தக்க - அஞ்சத்தக்க. பூசல் - போர்.
|
( 295 ) |
வேறு
|
1852 |
தோ்த்தொகைத் தானை மன்னன் | |
|
சீவகற் கிளைய நம்பி | |
|
வார்த்தொகை முழவம் விம்ம | |
|
மல்லுறழ் தோளி னானை | |
|
நீர்த்தொகைக் கழனி நாடு | |
|
நெடுநகர்ப் பெயரு நுங்கள் | |
|
சீர்த்தொகைக் குலனு மெல்லாந் | |
|
தெரிந்தெமக் குரைமோ வென்றான். | |
|